மாப்பிள்ளைக் கல் என்றும் சண்டி யர் கல் என்றும் அழைக்கப்படும் கை களால் கட்ட முடியாத உருண்டையான கற்கள் தமிழ்நாட்டில் பல கிராமங்களின் சாவடி களின் முன் இருந்தன. இன்றும் அவை பல ஊர்களில் இருக்கின்றன. ஆனால் அவற்றின் சிறப்பு பலருக்கு தெரி யாது. இளைஞரின் உடன் திறனைச் சோதிக்கப் பயன்பட்டவை அவை. அதுபோன்றதொரு கல்லின் மேல் ஊதா வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் ஓம் என்றும் எழுதப்பட்டிருந் தது. அதனுடைய எடை 80 கிலோ. அதனை 76 வயதான இளைஞர் ஜக்தேவ் சிங் எளிதாக தூக்கி நின்றார். சுற்றி நின்ற இளைஞர், இளைஞிகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் செய்த ஆர்ப்பரிப்பில் இருந்தோரின் செவிப்பறை கிழிந்திருக் கக்கூடும். கிராமப்புற ஒலிம்பிக் என்று அறியப் படும் கிலா ராய்ப்பூர் விளையாட்டு விழா வில் நடந்த நிகழ்ச்சி பற்றிய வர்ணனை இது. சாங்ரூர் கிராமத்தில் விவசாயத் தொழில் செய்யும் ஜக்தேவ் சிங் மது அருந்தமாட்டார். அவர் வீட்டில் வளர்க் கும் எட்டு எருமை மாடுகள் அவரின் கால் நடை சொத்துக்களாகும். அவர் நாள் தோறும் நான்கு லிட்டர் பால், கால் கிலோ வெண்ணெய், கால் கிலோ நெய் ஆகிய வற்றை உண்டு வருகிறார். அவருடைய பீமசேன திறமைக்கு இவை ஆதாரமாகும். ரேஷம் சிங், இரண்டு திடமான சீக்கி யர்கள் மற்றும் ஒரு சிறுவனும் அமர்ந் திருந்த புல்லட் மோட்டார் சைக்கிளை பற்களால் இழுத்துச் சென்றார். இது போன்ற சாகசங்கள் அங்கு ஏராளம் உண்டு. ஓடும் இரு குதிரைகளில் நின்ற படி சவாரி செய்யும் சீக்கியர், ஓடும் டிராக் டரை தன்மேல் ஏற்றிக்கொள்ளும் வலி மைமிக்க ஜாட் இன வாலிபர் எனப் பலர் இதில் கலந்துகொண்டு, மக்களை வியப் பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகின்றனர். கிலா ராய்ப்பூர் விளையாட்டு விழா 1933 முதல் நடைபெற்று வருகிறது. பஞ் சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கள், தேசிய சாம்பியன்கள் இங்கு வரத் தவறுவதில்லை. 1936 பெர்லின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் கர்னல் குர்சரண் சிங், போல் வால்ட் வீரர் லக்வீர் சிங், வட்டு எறியும் வீரர் பர்வீன் குமார் எனப் பலர் இந்த மண்ணை வணங்கிவிட்டுச் சென்றுள்ளனர். கர்னல் குர்சரண்சிங்கின் சொந்த ஊர் இது. அவர் நினைவாக ஆறுபேர் ஆடும் ஹாக்கி போட்டி ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது. கயிறு இழுக்கும் போட்டி, குதிரைப் பந்தயம், மூத்தோர் ஓட் டம் எனப்பல போட்டிகள் நடைபெறும். சென்ற ஆண்டு வரை மாட்டுவண்டி பந்த யம் (ஒற்றை, இரட்டை) நடைபெற்று வந்தது. மிருகவதை எதிர்ப்பாளர்கள் நீதி மன்றத்தில் தடை வாங்கியதால் இவ்வா ண்டு இது நடைபெறவில்லை. மாற்றுத் திறனாளிகள் ஓரமாய் உட் கார்ந்து வேடிக்கை பார்ப்பதில்லை. அவர் களும் உடல்திறன், தாங்கும் திறன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்கின் றனர். போலியோவால் பாதிக்கப்பட்ட குர் மெல்சிங் ஒரு பாட்டிலின் மீது ஏறி நின்று சாகசம் புரிந்தார். விபத்தில் இருகைகளை யும் இழந்த பஜன் சிங் 100 மீ ஓட்டத்தில் பங்கேற்றார். இங்கு கபடி, மல்யுத்தம், தடக ளப் போட்டிகளும் நடைபெறுகின்றன. எண்பது வயதைத்தாண்டிய தாத்தாக் களின் ஓட்டத்தைக் காண பெருங்கூட் டம் திரண்டிருக்கும். இந்தர் சிங் குரூவல் என்பவரின் மனதில் தோன்றிய ஆலோசனை இன்று பெரும் விழாவாக வடிவெடுத்து நிற்கிறது. உள்ளூர் இளைஞர்களை விளையாட்டை நோக்கி ஈர்க்கும் நோக் கத்துடன் அவர் குரூவல் விளையாட்டு அமைப்பை உருவாக்கினார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலை வர் பர்கத்சிங் இதில் பங்கேற்று ஹாக்கி திறனாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயி றை ஒட்டிய மூன்று நாட்களில் இப் போட்டி நடைபெற்று வருகின்றன. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, இத்தாலி எனப்பல நாடு களில் குடியேறிய பஞ்சாபிகள் இப் போட்டிகளைக் காண குடும்பத்துடன் பஞ்சாப் வருகிறார்கள். வரும் காலங் களில் இது ஒருவாரம் நடைபெறும் விழாவாக மாறக்கூடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.