அண்மையில் மத்திய அரசு வெளியிட் டுள்ள தேசிய நீர்க்கொள்கையின் வரைவு நகல் நீர்ப்பாசனம், குடிநீர், நீர்ப்பாசனம், நிலத்தடிநீர் வளங்களுக்கும், உரிமை களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள பல அம் சங்களைக் கொண்டதாக உள்ளது. இயற்கையின் கொடைகளை வணிக மயமாக்கி தங்களின் லாபவேட்டையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பன்னாட்டு மூலதனமும் தனியார் நிறுவனங்களும் முனைந்துள்ளன. பொலிவியா, சட்டிங்கர், பிளாச்சிமடா அனுபவங்களுக்குப் பின்ன ரும் அதே பாதையிலேயே தேசிய நீர்க் கொள்கையின் வரைவுக் கொள்கையை முன்வைத்துள்ளது. இக்கொள்கை மாநிலப் பட்டியலுள்ள நீர் ஆதாரங்களை மத்திய அரசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. மேலும் அனைத்து நீராதாரங்களையும் வணிகமயமாக்க வேண்டும்; குடிநீர் மற் றும் சுகாதாரத்திற்கான குறைந்தபட்சத் தேவைகள் தவிர மீதமுள்ள நீர் அனைத் தும் சந்தைக்கு உட்படுத்தப்படவேண்டும்; அரசாங்கம் மக்கள் நல சேவை அளிப்பவர் என்கிற பொறுப்பைக் கைவிட வேண்டும்; நீர்த்திட்டங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படவேண்டும்; 2002 ல் முன்னு ரிமை அம்சங்கள் என அறிவிக்கப்பட்ட குடிநீர், விவசாயம், மின்சாரம், சுற்றுச் சூழல், விவசாயம் சார் தொழில்கள், விவசா யம் சாராத் தொழில்கள். போக்குவரத்து போன்ற வரையறைகள் கைவிடப்பட வேண்டும்; நகர்ப்புறக் குடிநீர்க் கட்டணங் களில் கழிவு நீர் சுத்திகரிப்பிற்கான செல வையும் சேர்த்து தீர்மானிக்க வேண்டும்; மின்சாரம், தண்ணீர் மானியங்கள் வெட் டப்பட வேண்டும் என்ற வரைவுக் கொள் கையின் அம்சங்கள் நகர்ப்புற, கிராமப்புற மக்களின் தண்ணீர் உரிமை மீது தொடுக் கப்படும் கடும் தாக்குதல்களாகும். உலகின் நீர்வளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே குடிநீருக்குப் பயன்படத்தக்கது என்ற நிலையில், ஒரு நபருக்கு ஒரு ஆண் டிற்கு சராசரியாக 1,000 கன மீட்டர் என்ற உலக அளவுகோலின்படி இந்தியா நீர்ப் பற்றாக்குறை நாடாகவே கருதப்படுகிறது. பெரு நகரங்களில் ஒரு நபருக்கு தினசரி சரா சரி 450 லிட்டர் தேவைப்படுகிறது. நீர்ப் பூங்காக்களுக்கு 5,000 கோடி லிட்டர் தண் ணீர் செலவிடப்படுகிறது. 70 சதவீதம் ஏழை மக்களுக்கு மொத்த நீர் அளிப்பில் 5 சத வீதம் மட்டுமே கிடைக்கிறது. இப்படிப் பட்ட பற்றாக்குறையும், ஏற்றத்தாழ்வு களும் உள்ள நிலைமையிலேயே வரைவுக் கொள்கை இப்படிப்பட்ட எதிர்மறை அணுகுமுறையை முன்வைத்துள்ளது. தமிழகத்தில் 40,000 ஏரிகள், 52 நீர்ப் பாசன தேக்கங்கள் உள்ளன. மொத்தச் சாகு படி பரப்பளவில் பாதி அளவுக்கு மட்டுமே நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது. ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைகளும் விவசா யத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளன. இப் பிண்ணணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ் மாநில மாநாடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. நீர் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்நியக் கம்பெனிகளுக்கு அனுமதி தருவதை மத்திய / மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். வெள்ளம் பற்றியும், வறட்சி பற்றியும் அவை ஏற்படும்போது மட்டுமே பேசும் போக்கு உள்ளது. உரிய காலத்தில் நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் ஊருணிகளுக்கு பெயர் போனது.இராமநாதபுரம்,சிவகங்கை,விருது நகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங் களில் ஊருணிகள் நீர் நுகர்வுக்கு பெரிதும் உதவுபவை. ஆனால், இன்று பயன்படுத்தப் படாமல் உள்ளன. இவற்றை முறையாக பயன்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்யமுடியும். நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பை நீக்க, அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நீர்நிலைகள் ஏராள மான உள்நாட்டு / வெளிநாட்டு பறவை களுக்கு புகலிடமாகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது. எனவே நீர் நிலைகள் பாதுகாப்பு அவசியமாகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில் களும், அவற்றையொட்டிய குளங்களும் உள்ளன, இவை குப்பை மேடுகளாக மாறி யுள்ளன. குப்பைகளை, குறிப்பாக பிளாஸ் டிக் பொருட்கள் போடுவதை தவிர்த்தால், நீர் மீண்டும் ஊறும். நிலத்தடி நீர் பாது காக்கப்படும். ஏரிகளை தூர்வாரும் பணி ஆங்காங்கே நடைபெறுகிறது. இதை முறையாக முழு மையாக செய்ய வேண்டும். காடுகளே மழைக்கு ஆதாரம் என்ப தால், அவை பாதுகாக்கப்பட வேண்டும். காடுகள் அழிப்பு தடைச்சட்ட அமலாக்கம் உறுதி செய்யப்படவேண்டும். மாசுபட்ட நீர் சுத்திகரிக்கப்பட வேண் டும். நீரை சிறப்பாக பாதுகாப்போர் அந்தந்த பகுதி மக்கள் தான். எனவே, நீர்பாதுகாப் பில் பஞ்சாயத்துக்கள் முக்கிய பொறுப்பு வகிக்கும் சூழல் / விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை கே. பாலபாரதி எம்.எல்.ஏ. முன்மொழிய, ஆர். ராமமூர்த்தி எம்.எல்.ஏ., வழிமொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.