மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்)தமிழ் நாடு மாநில 20வது மாநாடு சனிக் கிழமையன்று (பிப்.25) நிறை வடைந்தது. நிறைவு நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: நாகப்பட்டினம் மாவட் டம் வங்க கடற்கரையில் 115 கிலோ மீட்டர் தூரம் கடல் வளத்தை கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கில் மீனவ மக்கள் வசித்து வருகிறார் கள். இயற்கை சீற்றங்களால் பல காலம் கடலுக்கு செல்ல முடியாமல் வருவாய் இழந்து பெரும் வறுமைக்கு உள்ளா கிறார்கள். மத்திய அரசோ கடல்சார் மேலாண்மை சட்டம் என்ற பெயரில் இந் திய மீனவர்களை வஞ்சித்து அந்நிய பகாசுர கம்பெனி களை வலுப்படுத்த கொண்டு வந்த சட்டத்தை மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல எதிர்ப்பு போராட்டங்கள் உருவானதால் இந்த சட் டத்தை நிறுத்தி வைத்துள் ளதே தவிர அச்சட்டத்தை வாபஸ் வாங்கவில்லை. உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமெனவும், மீனவ கிராமங்களுக்கு, கல்வி, சாலை, போக்குவரத்து, சுகா தார வசதிகளையும் செய்ய வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. நாகப்பட்டினம் மாவட் டத்தில் நெல்சாகுபடி மட் டுமே பெரும்பகுதியான மக்கள் ஈடுபடும் தொழிலாக உள்ளது. போதுமான தண் ணீர் கிடைக்காததாலும், இயற்கை சீற்றங்களாலும், வடகிழக்கு பருவமழை காலத்திலும் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு இத் தொழிலை நம்பியுள்ள மக் கள் வாழ்க்கை நிலை தடு மாறும் சூழல் தொடர்வதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வடிகால் வசதிகளையும், இழப்பிற்கு ஏற்ப, முறை கேடுகளற்ற போதுமான நிவாரணமும் உரிய காலத் தில் வழங்க வேண்டும். வெள் ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்காத நெல் இனங் களை கண்டுபிடிக்கவும், நெல்லுக்கு கட்டுப்படியான விலை கொடுத்து விவசா யத்தை மேம்படுத்தவும் தமி ழக அரசு நடவடிக்கை டுக்க வேண்டும். இவையில்லா மல், நாகை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாம்பழங் களை பயன்படுத்தி மாம் பழச்சாறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், சவுக்கு மரங்களை பயன்படுத்தி துணி உற்பத்தி தொழிற் சாலையையும் துவக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் அட்டைகள் தயா ரிக்கவும், கரும்புக் கழிவி லிருந்து இரசாயனப் பொருட் களை தயாரிக்கவும் தொழிற் சாலைகளை அரசு உரு வாக்க வேண்டும். மேற்படி தொழில்கள் உருவாக, மாவட்டத்தின் கட்டமைப்புத் தேவைக ளான, சாலை, ரயில் போக்கு வரத்து வசதிகளை மேம் படுத்தவும் அவசியம். விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு அதில் விரக்தி அடையும் நாகை மாவட்ட இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. இந்தத் தீர்மாதனத்தை ஏ.வி. முருகையன் முன்மொ ழிய, ஐ.வி. நாகராஜன் வழி மொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.