தேனீ வளர்ப்புப் பயிற்சி கோவை, பிப். 25- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தமிழ்நாடு வேளாண் மைப் பலைகல்கழகத்தில் மார்ச் 6 அன்று ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்குள்ளாக நேரடி யாக பல்கலைக்கழகத் திற்கு வந்து பயிற்சிக் கட் டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை நடைபெறும். இறுதியில் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் தகவல்களைப் பெற 0422 – 6611212 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.