திருத்தணி, பிப். 25- திருத்தணியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாய மான 10 ம் வகுப்பு மாண வனை, ஒரு கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்துள் ளது. மாணவனின் பெற்றோ ரிடம் கடத்தல்காரர்கள் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். திருப்பதி யில் இருந்து மிரட்டல் வந் திருப்பதால் தனிப்படை போலீசார் அங்கு விரைந் துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள விநாயகபுரத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்திரசேகர் (15), திருத்தணி யில் உள்ள ராதாகிருஷ் ணன் அரசினர் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த டிசம்பர் 19 ம் தேதி டியூஷனுக்கு சென்ற சந்திர சேகர், பின்னர் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல இடங்களில் தேடினர். நண் பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருத்தணி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் பாலு வழக்கு பதிவு செய்து, மாணவனை யாரா வது கடத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தார். 2 மாதங் களுக்கு மேலாகியும் மாண வன் எங்கு இருக்கிறான், என்ன ஆனான் என்று தெரி யாமல் இருந்தது. இந்நிலையில், சுப்பிர மணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்கள் மகன் சந்திரசேகர் எங்களிடம் தான் இருக்கிறான். ரூ.5 லட் சம் கொடுத்தால் அவனை விட்டுவிடுகிறோம். பணம் தரவில்லை என்றால் உங்கள் மகன் உயிருக்கு ஆபத்து என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான். பதற்றம் அடைந்த சுப்பிர மணி, மிரட்டல் வந்த அதே செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார். போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. இதனால் அவர் மேலும் பதற்றம் அடைந்தார். பதறியடித்து திருத்தணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சுப்பிரமணி, போனில் வந்த மிரட்டல் குறித்து தெரி வித்தார். விசாரணையில், திருப்பதியில் இருந்து போனில் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், மாணவன் திருப்பதியில் இருக்கலாம் என்று போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் திருப்பதி விரைந்துள்ளனர். மாண வன் கடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு இருப்ப தால் திருத்தணியில் பரபரப் பும் பீதியும் ஏற்பட்டுள்ளது. சுப்பிரமணி கூறுகை யில், என் மகனை கடத்திச் சென்றவர் 5 லட்சம் ரூபாய் கேட்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை. கூலி வேலை செய்யும் என்னால் அவ்வளவு பணத்தை எப் படி கொடுக்க முடியும். போலீசாரைத்தான் நம்பி உள்ளேன். என் மகனை அவர்கள் பத்திரமாக மீட்டு தருவார்கள் என நம்புகி றேன் என்றார்.

Leave A Reply