நாகை (வெண்மணி நகர்), பிப்.25- தாராளமயக் கொள்கைகளுக்கு எதி ராக வலுவான போராட்டத்தைத் தீவிரப் படுத்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேற்றத்துக்கான திறவு கோலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் வலியுறுத் திக் கூறினார். நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டில் பங் கேற்ற பிருந்தாகாரத் தீக்கதிர் நாளி தழுக்கு வெள்ளியன்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: இம்முறை நான் பங்கேற்ற, கட்சியின் பல மாநில மாநாடுகளில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என மிகவும் அக்கறையான விவாதங்கள் நடை பெற்றன. பெரும்பாலான மாநில மாநாடு களில் இளைஞர்கள், பெண்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பங் கேற்பு அதிகரித்திருக்கிறது. நிலமீட்புப் போராட்டங்கள் நம் கட்சி தேர்தல் தோல்வியின் காரண மாக சோர்ந்து பலவீனமடைந்து விடும் என்றும், இவையெல்லாம் மாநாடுகளில் பிரதிபலிக்கும் என்றும் பலர் எதிர்பார்த் தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு தவறானது என்று இம்மாநாடுகள் நிரூபித் துள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஜனநாய கத்தைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ் வுரிமை மீதான தாக்குதல்களை எதிர்த் தும் மிக வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏழை மக்களை நம் பக்கம் ஈர்க்கவும், அவர் களுடன் தொடர்பு ஏற்படுத்தவும் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்க மாநில மாநாட்டில் அக்கறையுடன் விவாதிக்கப்பட்டது. அதே போல் ஜார்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவ தற்கு எதிராக வலுவான போராட் டங்கள் அதிகரித்துள்ளன. இதன் பிரதி பலிப்பாக நில மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற இளம்போராளிகள் ஏராளமானோர் நம் கட்சியின் ஜார்கண்ட் மாநில மாநாட் டில் கலந்து கொண்டனர். அம்மாநிலத் தில் ஒரு பக்கம் மாவோயிஸ்ட் தீவிரவாதி கள், மறு பக்கம் அரசு நிர்வாக இயந்திரம் என இவை இரண்டின் ஒடுக்குமுறை, தாக்குதலுக்கு எதிராகவும் மலைவாழ் மக்களை எப்படி அணிதிரட்டுவது என்பது விவாதத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந் தது. மற்ற பிற கட்சிகளை ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே மிக அதிக அளவு ஜனநாயகப்பூர்வமாக விவாதித்து முடிவெடுக்கக் கூடியது என்பதை பெரு மிதத்தோடு இம்மாநாடுகள் வெளிப் படுத்துகின்றன. பொதுவான புரிதல் போதாது… நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் முக் கியம் என்பதையும் மாநில மாநாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நாம் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் போது உழைப்பாளி மக்கள் மீது ஏற் படுத்தும் தாக்கம் பற்றி மட்டும் “பொது வாக” புரிந்து கொண்டால் போதாது. தாரா ளமயக் கொள்கை சமூகத்தின் வெவ்வேறு பிரிவு உழைப்பாளிகள், குறிப்பாக தலித்து கள், பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத் தின் விதவிதமான பாதிப்புகள் குறித்து விரி வான ஆய்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, பொதுவாக தலித் உழைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கூலி குறைவாக இருக்கிறது. அதிலும் முறை சாராத தொழில்களில் ஈடுபடும் தலித்து களுக்கு, தலித் அல்லாத தொழிலாளர் களை விட 40 சதவிகிதம் குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது. அதேபோல் 6வது ஊதியக் குழு பரிந் துரையில் 4ம் பிரிவு ஊழியர்களை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 4ம் பிரிவு ஊழி யர்கள் நீக்கப்பட்டால் பாதிக்கப்படுவது தலித்துக்களும், மலைவாழ் மக்களும் தான். அரசமைப்புச் சட்டம் வழங்கிய இட ஒதுக்கீட்டு பலன்களை அவர்கள் பெற முடியாமல் ஒதுக்கப்படுவார்கள். இத்த கைய வேலைகள் ஒப்பந்த அடிப்படை யிலும், தினக்கூலி அடிப்படையிலும் நிரந் தரத்தன்மை இல்லாததாக மாற்றப்படு கின்றன. இதனால் மிக மோசமாக பாதிக் கப்படுவது தலித் உழைப்பாளி மக்கள் தான். பெண்கள் மீது தாராளமயத்தின் தாக்குதல் அதேபோல் நவீன தாராளமய நடை முறையில் பெண்களின் மீதான அணுகு முறையும், பெண் உழைப்பாளர் மீதான சுரண்டலும் ஆணாதிக்கத்தின் அடையா ளமாக அமைந்துள்ளன. இக்காலத்தில் மிகப்பெருமளவு வேலைகள் அவுட் சோர்சிங் என வெளியே வழங்குதல் நடை முறை பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா வில் இருந்து இந்தியாவிற்கு வழங்குவது மட்டும் அவுட் சோர்சிங் அல்ல, மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் அவுட் சோர்சிங்கை பயன்படுத்துகின்றன. இந்த முறையைப் பின்பற்றி உழைப்பாளிகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, இந்த முறையில் வீடு களிலேயே பெண்கள் சிறு சிறு வேலை களை வாங்கிச் செய்கின்றனர். இவர் களுக்கு எந்தவிதமான சட்ட உரிமை களோ, சலுகைகளோ கிடைப்பதில்லை. ஐஎல்ஓ (ஐடுடீ) சாசனத்தில் வீடுகளில் வேலைகளை வாங்கிச் செய்யும் பெண் களுக்கு, தொழிலாளர்களுக்குரிய உரிமை களை, சட்ட சலுகைகளை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்று பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் இந்தி யாவும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இன்று வரை எவ்வித உரிமைகளும் அந்த பெண் உழைப்பாளிகளுக்கு வழங்கு வதற்கு இந்திய அரசு எதுவும் செய்ய வில்லை. தாராளமயக் கொள்கைகளை அமல் படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே நமது முன்னேற்றத் துக்கான முக்கியத் திறவுகோல் ஆகும். தாராளமயக் கொள்கைகளினால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைப் பார்த்தால் மட்டும் போதாது. பண்பாட்டுத் துறை, ஊட கம், மனித உறவுகள் என பல்வேறு தளங் களில் ஏற்படும் பாதிப்புகளை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். துரதிருஷ்ட வசமாக நாம் இத்தகைய பன்முகத் தாக்கு தல் குறித்துப் போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை. வரதட்சணை சமூக அந்தஸ்தாக… உதாரணத்துக்கு, வரதட்சணை என் பது நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக தற்போது பெருமளவு அதிகரித்திருக்கிறது. ஆனால் இளம் பெண்கள், கல்வி கற்றவர் கள் உள்பட பலதரப்பினரும் பாதிக்கும் வர தட்சணை என்பது “அந்தஸ்தை” தீர் மானிக்கும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வரதட்சணையை சமூக அந்தஸ்தாக பார்க்கும் பழக்கம் எங்கு அதிகமாக உள் ளதோ, அங்கு கருவிலேயே பாலினத்தைக் கண்டறியும் சோதனையும் அதிக அள வுக்கு உள்ளது. இவ்வாறு கருவைக் கண் டறியும் சோதனையில் வயிற்றில் இருப்பது பெண் கரு எனத் தெரியவந்தால் அதை அப்போதே அழிக்கும் கொடுமையும் நடக் கிறது. வரதட்சணையைத் தொடரும் கருப்பு நிழலாக பாலினச் சோதனையும், பெண் கரு அழிப்பும் தொடர்கின்றன. இந் தியாவில் புள்ளிவிபர வளர்ச்சியைப் பற்றி பிரதமரும், சிதம்பரம் போன்றவர்களும் தீவிரமாகப் பேசிவரும் சூழலில், இதே காலகட்டத்தில்தான் பாலின விகிதமும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த மாதிரியான வளர்ச்சி என்பது பெண்கள், பெண் குழந்தைகளுக்கு தீங்கு பயப்பதாக உள்ளது. இந்திய மக்கள் முதலாளித்துவ மரத் தின் வெவ்வேறு கிளைகளையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய அர சியல் புறச்சூழ்நிலை இடதுசாரிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, இந்த சவாலான சூழலில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை அணி திரட்டி இந்திய மக்களுக்கு பொருத்தமான மாற்றை வழங்க முடியும் என நாம் நம்புகிறோம். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார். சந்திப்பு: வே.தூயவன் படம்: ஜாபர்

Leave a Reply

You must be logged in to post a comment.