வெண்மணி நகர்,(நாகை),பிப்.25- தலித் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறு கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: இந்தியச் சமூகத்தில் வர்க்க ஒடுக்குமுறையின் ஓர் பகுதி யாகவே சாதிய ஒடுக்குமுறையும் விளங்குகிறது. எனவே சமூக மாற்றத்திற்கான பாதை, போராட்டம், பொருளியல் ஒடுக்கு முறை எதிர்ப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய இரு முனை களிலிருந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டியதாக உள்ளது. தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண் டாமைக் கொடுமைகள் தற்போதும் நிலவி வருகிறது. எனினும் கடந்த கால ஆட்சியாளர்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சட்டப்பூர்வமான அதிகாரம் கொண்ட மாநில எஸ்.சி. / எஸ்.டி. ஆணையம் தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும். ஒண்டி வீரன் மணி மண்டபம் சாதிய அடுக்கில் பஞ்சமர்களுக்கும் கீழாகப் பெண்கள் வைக் கப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக தலித் மற்றும் பழங்குடி பெண்கள் மீது சாதிய ஒடுக்குமுறையோடு பாலியல் ஒடுக்கு முறையும் இணைந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. சாதி மறுப்புத் திருமணங்களில் பெண்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாவதோடு கௌரவக் கொலைகளும் நடத்தப்படு கின்றன. சாதிப் பயர்களை தெருக்கள், குடியிருப்புகளுக்குச் சூட்டுவது தொடர்கிறது. இந்நிலையில் தலித் மக்களின் பண் பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட வேண்டும்.சிதம்பரம் கோவில் நந்தனார் நடந்த பாதை திறக்கப் பட வேண்டும். தலித் பஞ்சாயத்து தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் எதிர்கொள்கிற இன்னல் கள் ஏராளம். தலித் தொகுதிகளில் சாதி ஆதிக்க சக்திகளின் பொம்மை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தலித் பிரதிநிதித்துவ உரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.வெற்றி பெற்றவர்களை யும் சுயமாகச் செயல்பட விடுவதில்லை. இத்தகைய சாதி ரீதி யான அரசியல் போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய அநீதி களைத் தடுத்து நிறுத்திட கடும் நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அரசை வலியுறுத்துகிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால் சமூக நீதி பறிக் கப்படுகிறது. இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுவதில் லை. நிலுவைக் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண் டும். தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசு பட்டியலின, பழங்குடியினதுணைத் திட்ட அமலாக்கம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண் டு ம். சட்டமன்றம், சிறப்பு அமர்வு மூலம் விவாதிக்க வேண்டும். தலித் மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப் பட்ட பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும்.பாதாளச் சாக்கடைப் பணிகள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல், மயானப் பணிகள் போன்றவை நவீனப்படுத்தப்பட்டு மனிதர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இனச்சான்றிதழ் தமிழகத்தில் 7 லட்சம் பழங்குடி மக்களில் 1 லட்சம் மக்களுக்கு மட்டும் தான் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள ஆணையின் படியே உடனடியாக பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.நூற்றாண்டு காலமாக சாதியத்தின் நுகத்தடியில் அழுந்திக் கிடக்கிற தலித் மக்களின் அனைத்து உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும். இந்தத் தீர்மானத்தை கே.சாமுவேல்ராஜ் முன்மொழிந்தார், பி.டில்லிபாபு எம்.எல்.ஏ. வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: