அகமதாபாத், பிப். 25 – குஜராத் பல்கலைக்கழ கத்துடன் இணைந்த உறுப் புக் கல்லூரியின் தலித் ஆசிரியரை சாதி விமர்சனம் செய்த, பல்கலைக்கழக துணை வேந்தர் பரிமால் திரிவேதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். திரிவேதியும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2 நாட்களாக தலைமறைவாக இருந்து பின்னர் அகமதா பாத் காவல்துறையின் தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் பிரிவில் சரணடைந்தனர். பின்னர் பெருநகர நீதி மன்றம் ரூ.25 ஆயிரம் தனி உத்தரவாதம் இணைப்பு பேரில், ஜாமீனில் விடுவித் தது. அவரது பாஸ்போர்ட் டும் நீதிமன்றத்தில் ஒப் படைக்கப்பட்டது. சாதி ரீதியாக விமர்சனம் செய்ததாக குற்றம்சாட்டப் பட்ட, திரிவேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி யின் நம்பிக்கையை பெற்று, 2வது முறை துணைவேந்தர் ஆனவர். திரிவேதி மீது முத லில், காவல் துறையினர் எப் ஐஆர் பதிவு செய்ய மறுத்த னர் என, புகார் செய்த தலித் ஆசிரியர் பங் கஜ் ஷிரி மலி குற்றம்சாட்டினார். வன் கொடுமை சட்டத் தில் இந்த புகார் 2008ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த நிலை யில் ஷிரிமலி, குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திரிவேதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செயல் நட வடிக்கை அறிக்கை புதன் கிழமை (பிப்.22) தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் பல்கலைக்கழகத்தின் சிண் டிகேட் உறுப்பினரும், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர் பாளருமான மணிஷ் தோஷி தார்மீக ரீதியில் துணைவேந்தர் திரிவேதி பதவி விலகவேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: