வெண்மணிநகர் (நாகை),பிப்.25- தீக்கதிர் வளர்ச்சி நிதிக்காக தமிழகம் தழு விய வசூல் இயக்கத்தை முழு வீச்சுடன் நடத் துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாடு தீர்மானித்துள்ளது. மார்ச் 13,14 ஆகிய தேதிகளில் மாநிலம் முழு வதும் நிதிவசூல் நடைபெறுகிறது. இதுகுறித்த தீர்மானத்தை கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன் மொழிந்தார். தீர்மானம் வருமாறு: “கட்சி ஏடு கட்சியின் அமைப்பாளன்” என்றார் மாமேதை லெனின். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு சார்பில் நடத்தப்படும் தீக்க திர் நாளேடு தமிழக உழைக்கும் மக்களின் போர்வாளாகவும், கேடயமாகவும் விளங்கிவரு கிறது. 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தீக்கதிர் இந்த ஆண்டில் பொன்விழாவை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, முதலாளித்துவ ஊடகங் கள் அவதூறுகளை, அன்றாடம் பொய்ச்செய்தி களை அள்ளிவீசி வருவதை நாம் அனை வரும் அறிவோம். இவற்றை எதிர்கொண்டு முறியடித்து, உழைக்கும் மக்களின் நலனை முன்னெடுத்துச் செல்லும் பேராயுதமாக நமது கையில் சுழல்வது தீக்கதிர் நாளேடு ஆகும். பத்திரிகைகள் உள்ளிட்ட முதலாளித்துவ ஊடகம் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆபாசம், வன்முறை, வெற்றுப்பர பரப்பு என வியாபாரத்தில் இறங்கியுள்ளதோடு மட்டுமின்றி, சோசலிசக் கருத்துக்கள் மக் களிடம் சென்று சேர்ந்துவிடாமல் கவனமாக இருந்து வருகின்றன. இந்நிலையில், நவீன தாராளமயமாக்கல், மதவெறி, சாதிவெறிச் சிந்தனைகளுக்கு எதிராக உழைக்கும் மக்க ளின் போராட்டங்கள், பெண்ணுரிமை, மதச் சார்பின்மை, சமூக நீதி மற்றும் சமூகசீர்த் திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத் துச்செல்லும் மகத்தான சாதனமாக நமது ஏடு விளங்குகிறது. மதுரையிலிருந்து தீக்கதிர் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் 1993ல் சென்னையில் இரண்டாவது பதிப்பை துவக்கி வைத்தார். தொடர்ந்து 2007ல் கோவைப்பதிப்பு,2010ல் திருச்சி பதிப்பு என தற்போது நான்கு பதிப்புகளாக நான்கு திசைகளிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது நமது தீக்கதிர் ஏடு. நான்கு பதிப்புகளும் வண்ணத்தில் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவசர நிலைக்காலம் துவங்கி இன்று வரை தீக்கதிர் சந்தித்த அடக்குமுறைகள் எண்ணற்றவை. அத்தனையும் எதிர் கொண்டு இந்த ஏடு நின்று,நிலைத்து, பொன் விழாவை நோக்கி நடைபோட்டுக்கொண் டிருப்பதற்குக் காரணம் மக்களின் ஆதரவே ஆகும். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தி யில் தீக்கதிர் நாளேட்டை நடத்தி வருகிறோம். அரசு விளம்பரங்கள் வழங்குவதில் அரசி யல் பார்வையின் அடிப்படையிலான பாகு பாடு நிலவுவதால் நமக்கு விளம்பரம் கிடைப் பதில்லை. காகிதம், மை உள்ளிட்ட அச்சுப் பொருட்கள் அனைத்தின் விலைகளும், அத்தியாவசியப் பொருட்களைப் போன்றே உயர்ந்து வருகிறது. அதேசமயம், பல்வேறு இழப்புகளை தாங்கிக்கொண்டு தீக்கதிரை நமது கட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தீக்கதிருக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்க, வளர்ச் சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல, பெரும் மூலதனம் தேவைப்படுகிறது. எனவே, தீக்கதிர் வளர்ச்சி நிதிக்காக தமிழகம் தழுவிய வசூல் இயக்கத்தை முழு வீச்சுடன் நடத்து வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 மாநில மாநாடு தீர்மானிக்கிறது. 2012ம் ஆண்டு மார்ச் 13,14 தேதிகளில் தமிழகம் முழுவதும் தலைநகர் சென்னை துவங்கி குக்கிராமங்கள் வரை விரிவான முறையில் பொதுமக்களிடம் பக்கெட் ஏந்தி வசூல் செய்வது என மாநாடு முடிவு செய் கிறது. கட்சியின் மாநிலச்செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர் கள், மாவட்டச்செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர் கள் மற்றும் உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் கள் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்குவது என இந்த மாநாடு தீர்மானிக்கிறது. இந்த நிதி வசூல் இயக்கத்தை வெற்றிகர மாக நடத்திடுவோம். தீக்கதிர் நமது ஏடு, நமது போர்வாள். இதைப்பாதுகாப்பது நமது கடமை. களம் இறங்குவோம், கடமையாற்றுவோம் என இந்த மாநாடு கட்சி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறது. இத்தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: