தொடரும் கடுமையான மின்வெட்டு: சிறு, குறுந்தொழில் சங்கம் குற்றச்சாட்டு நாமக்கல், பிப். 25- தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கடுமை யாhன மின்வெட்டால் சிறு, குறுந்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் தங்களது சொந் தங்களை பிரிந்து வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சிறு, குறுந்தொழில் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் சங்கக் கூட்டம், சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமயில் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் செயலா ளர் சண்முகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத் தில் தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான மின் பற்றாக்குறையால் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தயங்குகின்றனர். ஆகவே, மின்பற்றாக் குறையை போக்க தமிழக அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மின்வெட் டால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இத னால், அவர்கள் தங்களது சொந்தங்களை விட்டுப் பிரிந்து வேறு மாநிலங்களுக்கு சொற்ப சம்பளத் திற்கு வேலை தேடிச் செல்லும் அவல நிலையில் உள்ளனர். இதனை தடுத்து தொழிலாளர்கள் காப் பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத் தியாவசியத் தொழிலான விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அரசு தடையில்லா மின் சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்பகிர்மானத்தில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அனைத்து சிறு தொழில்களுக்கும் அவர்களது தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வாங்க வங்கிகளிடமிருந்து கடன் பெற ஆவண செய்ய வேண்டும். சோலார் மின் விளக்குகளை இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், ஏராளமான சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.