வெண்மணிநகர், (நாகை),பிப்.25- சேதுசமுத்திரத் திட் டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகப் பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக மக்களின் ஒன் றரை நூற்றாண்டு கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இதனை நிறை வேற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்டகாலமாக வலி யுறுத்தி வருகின்றன. இடது சாரிகள் ஆதரவோடு நடை பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக அறி வித்து 2005 ஜூலையில் பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் சுமூகமாக நடை பெற்று வந்த நிலையில், அர சியல் ஆதாயம் பெறும் நோக்குடன் மத நம்பிக்கை என்ற பெயரில் திட்டத் திற்கு எதிரான சீர்குலைவு வேலைகளில் பாரதிய ஜனதா கட்சியும் சங்பரிவார மும் ஈடுபட்டது. தமிழகத் தின் நலனுக்கு விரோதமாக அதற்கு துணைபோனது அதிமுக. 820 கோடி ரூபாய் முதலீடு செய்து திட்டத்தின் ஒருபகுதி பணிகள் நிறை வேற்றப்பட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டது. குறித்த காலத்தில் திட் டம் நிறைவேற்றப்படாத தால் திட்டச்செலவு ரூ.2400 கோடியில் இருந்து 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி ரூ.4500 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தனது ஊச லாட்டத்தை கைவிட்டு, திட் டத்தை முதலில் துவக்கிய 6 வது வழித்தடத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்வது தான் திட்டம் நிறைவேற்றப்படு வதற்கான ஒரே வழி என் பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு முறையாக எடுத்துச் சென்று, நிலு வையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமி ழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். மதவாத சக்திகள் கூறும் ராமர்பாலம் என்பது வெறும் கற்பனையே, இப்பாதை இருப்பதாகக் கூறப்படும் ஆதம்பாலத்தை ஆழப் படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம்.எனவே கற் பனையான ராமர் பாலம் பற்றிய மதவாத அரசிய லுக்கு, மத்திய அரசு செவி மடுக்காமல், கால தாமத மின்றி சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளை யும் மேற்கொள்ளவேண்டு மென மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இத் தீர்மானத்தை க.கனகராஜ் முன்மொழிய, இரா.ஜோதிராம் வழி மொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.