சென்னை, பிப்.25- தள்ளுவண்டியில் சிக் கியதால் ரஷ்ய சரக்கு விமா னம் ஓடுபாதையிலேயே நின்றது. இதனால் சென்னை வந்த சிங்கப்பூர் விமானம், தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னை பழைய விமா னத்தில் இருந்து தனியார் சரக்கு விமானம் வெள்ளி யன்று (பிப். 24) 10 மணிக்கு ரஷ்யாவுக்கு புறப்பட தயா ராகியது. அந்த சரக்கு விமா னத்தை ஓடு பாதைக்கு தள்ளுவண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென தள்ளுவண்டியில் பழுது ஏற்பட்டது. இதனால் தள்ளுவண்டியில் இருந்து விமானத்தை வெளியேற்ற முடியவில்லை. விமானமும், தள்ளுவண்டியும் அப்ப டியே ஓடு பாதையிலேயே நின்று விட்டன. அந்த நேரத்தில் சிங்கப் பூரில் இருந்து சென்னை வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 264 பயணிகளு டன் வந்தது. ஆனால் ஓடு பாதையில் சரக்கு விமானம் நின்றிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரை யிறங்க முடியவில்லை. இதை யடுத்து அந்த விமானம் சுமார் அரை மணி நேரம் வானிலே வட்ட மடித்து பறந்து கொண்டிருந்தது. உடனே விமான நிலைய ஊழி யர்கள் பழுதடைந்த சரக்கு விமானத்தையும் தள்ளு வண்டியையும் பிரிக்க முயற் சித்தனர். ஆனால் முடிய வில்லை. இதனால் சிங்கப்பூர் பய ணிகள் விமானத்தை அதி காரிகள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி அங்கு தரை யிறங்க வைத்தனர். பிறகு விமான நிலைய ஊழியர்கள் ராட்சத கிரேனை கொண்டு வந்து விமானத் தையும் தள்ளுவண்டியை யும் ஓடுபாதையில் இருந்து டாக்சிவேக்கு மாற்றினர். அதன்பின்பு பெங்களூ ரில் இருந்து சிங்கப்பூர் விமா னம் நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வந்து தரை யிறங்கியது. சென்னைக்கு வரும் மற்றும் புறப்படும் மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயங்கின.

Leave a Reply

You must be logged in to post a comment.