வெண்மணிநகர், (நாகை), பிப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் நாகை நகரமே குலுங்கும் வகையில் இலட் சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இத னால், நாகை நகரமே செங் கடலாய்க் காட்சித்தந்தது. பல்லாயிரக்கணக் கான செந்தொண்டர்களின் மிடுக்கு மிகு ராணுவ அணி வகுப்பு காண்போரின் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நாகையில் பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. மாநாட் டின் முத்தாய்ப்பு நிகழ்வாக இலட்சத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற் றது. புத்தூர் அண்ணா சிலை அருகில் இருந்து பேரணி துவங்கியது. பேண்ட் இசைக்குழு ஆப்பரக்குடி மேளம், நாகை மாவட்டத்தின் கலாச் சார நிகழ்வுகளுடன் பேரணி துவங்க, அடுத்ததாக தலை வர்கள் முன்னால் அணி வகுத்து வர, கும்பகோணம் ஜி. எம்.ராஜ் பேண்ட் இசைக்குழு வினரின் பேண்டு வாத்தியம் முழக்கத்துடன் அணிவகுத்து வந்தது. அதன் பின் 20 வது மாநாட்டை குறிக்கும் வகை யில் 20 செங்கொடிகளுடன் செம்படையினர் அணி வகுத்து வந்தனர். மிடுக்கு நடைபோட்ட குட்டி செந்தொண்டர்கள் பேரணியில் தமிழகம் முழு வதிலுமிருந்து 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட செந்தொண் டர்கள் கம்பீரமாக அணி வகுத்து வந்தனர். அவர்களின் மிடுக்கு மிகுந்த அணிவகுப்பு நாகை மக்களை கவரும் வகையில் இருந்தது. பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று செந்தொண்டர்களை வர வேற்றனர். குட்டிக்குழந்தைகள் செந் தொண்டர்கள் அணிவகுத்து வந்தது அனைவரையும் ஆச்ச ரியப்படுத்தியது. சோர்வடை யாமல் பொதுக்கூட்டம் நடை பெறும் இடம் வரை 6 கி.மீ தூரம் மிடுக்குடன் நடை போட்டனர். அதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒவ் வொரு மாவட்டவாரியாக பேனர்களை ஏந்தி வந்தனர். வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். வேலூர், தர்மபுரி, கிருஷ் ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திரு வண்ணாமலை, கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி, விருதுநகர்,மதுரை மாநகர், மதுரைபுறநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம நாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், விழுப்புரம், .கட லூர், பாண்டிச்சேரி, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டி னத்தைச் சேர்ந்த லட்சக்கணக் கானோர் அணிவகுத்து வந் தனர். வரவேற்பு அவர்களுக்கு போக்கு வரத்து பணிமனை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரவேற்பளித் தனர். இடதுசாரி ஒற்றுமை ஓங்கட்டும் என்ற அவர்களின் முழக்கத்திற்கு பேரணியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தோழர் கள் முஷ்டியை உயர்த்தி நன் றிகளைத் தெரிவித்தனர். பேர ணியில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு வாண வெடி வெடித்து வரவேற்பளிக்கப் பட்டது. கைகளில் செங்கொடி களை ஏந்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி வாழ்க என்ற முழக்கத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர். வழிநெடுக செங்கொடி பேரணி, புத்தூர் அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கி மேலக்கோட்டை வாசல், நீலா தெற்குவீதி, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் வீதி, பப் ளிக் ஆபீஸ் ரோடு வழியாகச் சென்றது. மாநாட்டுப் பேர ணியை கட்சியின் தலைவர் கள் அவுரிதிடல் அருகில் பார் வையிட்டனர். அங்கு தலைவர் களுக்கு செந்தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தோழர் பி.சீனி வாசராவ் திடல் வரை வழி நெடுக செங்கொடிகள் கட்டப் பட்டிருந்தன. பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆங்காங்கு பல்வேறு அமைப் புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டன. அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, உத்தேச மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விலை உயர்வு களை கண்டித்து பதாகை களை ஏந்தி ஆணும் பெண் ணும் திரண்டு வந்தனர். கலாச்சார பிரதிபலிப்பு தமிழகம் முழுவதிலு மிருந்து கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் வீச்சு, தேவராட்டம், களியாட் டம், ஜிப்ளா மேளம், பெரிய மேளம் உள்ளிட்ட தமிழகத் தின் கலாச்சார நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் வகையில் பேரணியில் பல்வேறு கலைக் குழுக்கள் பங்கேற்றன. பேரணி நிறைவாக வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடலை அடைந்தது. இங்கு அமைந்த தோழர் பி.சீனிவாச ராவ் திடலில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி. முருகையன் தலைமை வகித் தார். அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து வர வேற்புரையாற்றினார். நாகை மாலி எம்.எல்.ஏ நன்றி கூறி னார். இப்பொதுக் கூட்டத்தில் இலட்சக்கணக் கானோர் திரண்டதால் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானம் நிரம்பி வழிந்தது. புதுவை சப்தர்ஹஷ்மி, புதுகை பூபாளம் கலைக் குழு வினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.