சேலம், பிப். 25- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஓமலூர் பகுதி யில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒமலூர் அடுத்துள்ள கொளசம்பட்டி மின்சா ரம் வாரிய அலுவலக முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாரப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரன் முன்னில்லை வகித்தார். இதில் தமிழக அரசினால் அமல்படுத்தப்பட்டு வருகின்ற அறிவிக்கப்படாத மின்வெட்டை போக்கி, தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண் டும். சிறு, குறுந்தொழில்கள் மின்தடையின் காரண மாக அழிந்து வருவதை தடுத்திட வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் அரியாக் கவுண்டர், செயற்குழு உறுப்பினர்கள் சின்ராஜ், மோகன் மற்றும் ஐம்பதற்கும் மேற்பட்ட ஊழியர் கள் கலந்து கொண்டு மின்வெட்டுக்கெதிராக முழக்கமிட்டனர்.

Leave A Reply