கோவை, பிப். 25- கோவை வாளையார் பகுதியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 யூனிட் மணலை போலீசார் பறி முதல் செய்தனர். கோவை அடுத்துள்ள வாளை யார் பகுதியில் க.க.சாவடி போலீசார் வாகன சோதணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. இந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த லாரியில் 5 யூனிட் மணல் கேரளாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி ஓட் டுநர் சக்திவேல் (26), உதவியாளர் வேலுச்சாமி (25) ஆகியோர் கைது செய்து, மணலை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply