திருப்பூர், பிப். 25- கூட்டுறவு சங்கத்தில் சேராத கைத்தறி நெசவா ளர்களையும் மத்திய அர சின் கிழ் வழங்கப்படுகிற கடன் அட்டைவழங்கும் திட்டத்தில் சேர்க்க வேண் டும் என மாவட்ட சி.ஐ. டி.யு கைத்தறி நெசவாளர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. சங்கத்தின் சார் பில் கைத்தறி துறை உதவி இயக்குனரிடத்தில் செவ் வாயன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது : மத்திய அரசின் துணி நூல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கைத்தறி அபிவிருத்தி ஆணையம் மூலம் பல்வேறு கைத்தறி வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன. இதில், கடந்த டிசம்பர் மாதம் புதிதாக நெசவாளர் களுக்கு வங்கி கடன் அட்டை வழங்கம் திட் டம் அறிமுகப்படுத்தபட் டுள்ளது. இத்திட்டம் குறித்த நெசவாளர்களுக் கான விழிப்புணர்வு கூட் டம் பெயரளவிற்கு மட் டுமே நடைபெற்றுள்ளது. அதோடு, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, மடத்துகுளம், காங்கயம், தாராபரம் மற் றும் அவினாசி பகுதிகளில் 44 கைத்தறி நெசவாளர் சங் கங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் பதிவு செய்த உறுப்பினர் களாக உள்ளனர். எந்த சங் கத்திலும் இணையாமல் தனியாரிடம் உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் 25 ஆயிரம் பேர் வரை உள்ள னர். கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு 5,000 மட் டுமே வந்துள்ளது. கூட்டு றவு சங்கங்களில் சேராத ஆயிரகணக்கான நெசவா ளர்கள் உள்ளனர். எனவே அனைத்து நெசவாளர்க ளையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள் ளது. முன்னதாக மாவட்ட சி.ஐ.டி.யு கைத்தறி நெசவா ளர் சங்க தலைவர், உத்த மன், செயலாளர் சண்மு கம், பொருளாளர் பாண்டு ரங்கன் மற்றும் நிர்வாகி கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தங்களை கடன் அட்டை வழங்கும் திட்டத்தில் இணைக்கக்கோரி கைத் தறி உதவி இயக்குநர் அலு வலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர். உதவி இயக்குனர் பெரியசாமி இது குறித்து தெரிவிக்கையில், ‘’கைத் தறி நெசவாளர்கள் யாரும் விடுபடாமல் இத்திட்டத் தில் சேர்க்கப்படுவர். சங் கத்தில் உறுப்பினர் அல் லாத நெசவாளர்களையும், அவர்கள் பகுதிக்கு அருகே உள்ள கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப் பம் பெற்று, இத்திட்டத் தில் பயன் பெற நடவ டிக்கை எடுக்க உத்தரவி டப்டுள்ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: