கு. பாளையம், பிப். 25- குமாரபாளையத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து சந்தேகத்தின் பேரில் தனியார் ஆஸ்பத் திரிகளில் போலீசார் சோதனை செய்து டாக் டர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாரா யண நகரைச் சேர்ந்தவர் சண்முகம். முகத்தில் ஏற் பட்ட கொப்பளத்திற்கு குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சென்றார். பாலசுப் பிரமணியம் என்ற டாக் டர் சண்முகத்திற்கு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சண்முகத்திற்கு உடலில் அரிப்பு, முகத்தில் தடிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் உணர்வற்ற கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அதிர்ச்சியடைந்த சண் முகத்தின் மனைவி சகுந் தலா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்மு கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆஸ்பத் திரிக்குள் சென்று போலீ சார் சோதனை செய்தனர். இதில் பாலசுப்பிரமணி யம் டாக்டருக்கு முறை யாக படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப் பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத் திரியிலிருந்து இருந்து பறி முதல் செய்யப்பட்ட ஆவ ணங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும் குமாரபாளை யம் மற்றும் கிராமப்புறங் களில் ஆஸ்பத்திரிகளில் நேற்று போலீசார் அதிரடி சோதன் நடத்தினர். ஆஸ் பத்திரிகளில் இருந்த 5 டாக்டர்களிடம் போலீ சார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த மருத்துவ சான்றிதழ்கள் உண்மையானவைதானா, சான்றிதழ் பெற்ற மருத் துவ முறையில்தான் சிகிச்சை அளித்து வருகி றார்களா என போலீசார் விசாரணை செய்தனர். டாக்டர்களிடம் இருந்த சான்றிதழ்களின் நகல் களை பெற்ற போலீசார் அதை வழங்கிய நிறுவ னங்களிடம் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். இதனால் குமார பாளையம் பகுதியில் அனு பவ வைத்தியம் பார்த்த சில போலி டாக்டர்களின் ஆஸ்பத்திரிகள் நேற்று தற்காலிகமாக பூட்டப் பட்டிருந்தன. போலீசாரின் விசாரணைக்கு பயந்து சில போலிகள் தலைமறை வாகி விட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: