விழுப்புரம், பிப்.25- திருவெண்ணைநல்லூர் அருகே கோபுலாபுரம் கிரா மத்தை சேர்ந்த அருணகிரி மகன் சுந்தரம், விவசாயி. கடந்த 22ம் தேதி இவரது நிலத்தில் இருந்த கரும்பை வெட்டி விட்டு அதன் சோலையை எரித்துள் ளார். அப்போது காற்று வீசியதால் தீ வேகமாக பரவி அருகில் இருந்த செல்வம், தேவேந்தி ரன் கரும்பு வயலுக்கு பரவியது. தகவல் அறிந்ததும் திருவெண் ணைநல்லூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத் தில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப் புள்ள கரும்பு எரிந்து நாசமானது.

Leave A Reply