கோவை, பிப். 25- ரேசன் கடையில் எடை குறைவாக பொருட்களை விநியோகம் செய்த விற் பனையாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை, கோட்டை மேட்டில் உள்ள ரேசன் கடையில் (எண்:1948) பொதுமக்களுக்கு எடை குறைவாக பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து 82வது வார்டு கவுன்சிலர் முகமது சலீம் தலைமையிலான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சனியன்று காலை ரேசன் கடையை சோதனையிட் டனர். அப்போது, பொது மக்களுக்கு விநியோகிக் கப்பட்ட பொருட்கள் எடை குறைவாக இருந் தது கண்டுபிடிக்கப்பட் டது. இதுகுறித்து தகவல றிந்து அங்கு வந்த கூட்டு றவுத் துறை தனி அலுவ லர் தலைமையிலான அதி காரிகள் கடையில் உள்ள பொருட்கள் மற்றும் பில் புக், லெட்ஜர் உள்ளிட்ட பதிவேட்டை ஆய்வு செய் தனர். இதிலும், கணக்கு தவ றாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை யடுத்து, ரேசன் கடை விற் பனையாளர் சந்திரகலாவை அதிரடியாக இடமாற்றம் செய்து தனி அலுவலர் உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.