பெங்களூரு, பிப்.25- நில ஒதுக்கீட்டில் நடந்த தாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக பாஜக தலை வரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரு மான எடியூரப்பா மீது ஊழல் விசாரணைக்கான லோக் அயுக்தா அமைப்பின் காவல் துறையினர் சனிக்கிழமை யன்று (பிப்.25) முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்தனர். கர்நாடக வீட்டுவசதி வாரிய மனைகளை சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய் தது தொடர்பாக அவர் மீது மோசடி மற்றும் சதிச்செயல் வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளதாக லோக்அயுக்தா காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். முதலமைச்சருக்கான தனி அதிகாரம், பத்திரிகையாளர் களுக்கான ஒதுக்கீடு ஆகிய வற்றில் முறைகேடுகள் நடந் தது தொடர்பாகத் தொடரப் பட்ட ஒரு தனிப்பட்ட வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இம்மாதம் 21 அன்று விசாரணைக்கு எடுத் துக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடந்தபோது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, அவரது மகள் அருணாதேவி, மகளின் நான்கு உதவியாளர்கள், வீட்டு வசதி வாரியத்தின் 2 அதி காரிகள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply