திருவனந்தபுரம், பிப்.25- அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி அரசு உத்தேசித் திருப்பதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் ஆயிரக்கணக் கானோர் திருவனந்தபுரத் தில் அரசு தலைமைச் செய லகம் முன்பாக வியாழ னன்று முற்றுகைப் போராட் டம் நடத்தினர். இளை ஞர்களின் வேலை வாய்ப்பு தள்ளிப்போடப்படுவதை எதிர்த்துப் போராடிய வாலி பர் சங்கத்தினர் காவல் துறையினரால் கைது செய் யப்பட்டார்கள். உம்மன் சாண்டி அரசு இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை என் றாலும், அரசின் பல்வேறு மட்டங்களில் இதற்கான கலந்தாய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. வியாழனன்று காலையி லேயே தலைமைச் செய லகம் முன்பாகத் திரண்டு விட்ட வாலிபர் சங்க ஊழி யர்கள், அதன் நான்கு வாயில்களையும் முற்றுகை யிட்டனர். தலைமைச் செய லகத்திற்குச் செல்லும் வழிக ளிலும் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பின் னர் அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாகப் போராட் டத்தைத் தொடங்கிவைத் துப் பேசிய மார்க்சிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கொடி யேறி பாலகிருஷ்ணன், “உம்மன் சாண்டி அரசு மாநில மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. பல்வேறு மதவாத சக்திகள், சாதிய அமைப்புகளின் நிர்ப் பந்தத்திற்கு உட்பட்டு இந்த அரசு இயங்குகிறது,” என்று கூறினார். இதனிடையே முதலமைச்சர் உம்மன் சாண்டி, இதில் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும், அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என்று கூறியுள்ளார். கேரள மக்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், எனி னும் இளைஞர்களுடன் கலந்தாலோசித்தே எந்த முடிவும் எடுக்கப்படும் என் றும் கூறினார். தற்போது கேரளத்தில் அரசு ஊழியர் கள் ஓய்வுபெறும் வயது 55 ஆக உள்ளது. இதனை 56 ஆக உயர்த்த அரசு உத்தேசித் தது.

Leave A Reply

%d bloggers like this: