ஹைதராபாத், பிப். 25 – சம்பள பற்றாக்குறையை சரிசெய்ய, உஸ்மானியா பல் கலைக்கழகம் தனது பொறி யியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியிடம் இருந்து கடந்த மாதம் ரூ.3 கோடி கடன் வாங்கியது. அரசு வழங்கும் மானியத் தொகையில் இந்தக் கடனை அடைத்துவிடலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்துள் ளது. மாணவர் சேர்க்கைக் கட்டணம் மற்றும் கல்லூ ரியை பல்கலைக்கழக உறுப் புக் கல்லூரியாக இணைப் பதற்கான கட்டணம் மூல மாகவும் பல்கலைக்கழகம் தனது நிதி ஆதாரத்தை திரட்டுகிறது. வருகிற ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டு துவங்குகிறது. அந்த கால கட்டத்தில் இந்த நிதி திரட் டப்படுகிறது. பல்கலைக்கழக வளாக மானியமாக ரூ.166 கோடியை அளிக்க மாநில அரசு பட் ஜெட்டில் அறிவிக்கப்பட் டது. கடந்த ஆண்டு ரூ.113 கோடியை பெற்ற பல் கலைக்கழகம் இந்த ஆண்டு அதைவிட கூடுதலானத் தொகையை பெறுகிறது. பல்கலைக்கழகம் ஊழி யர்களுக்கு சம்பளம் வழங்கு வதில் ரூ.70 கோடி பற்றாக் குறையுடன் உள்ளது. 2008ம் ஆண்டு புதிய சம்பள விகிதம் அறிமுகமானதைத் தொடர்ந்து உஸ்மானியா பல்கலைக்கழகம் நிதிச் சுமையில் தவிக்கிறது. வளா கமானியத்தை அதிகரிப் பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று துணைவேந்தர் எஸ். சத்ய நாராயணா தெரிவித் தார். சம்பளம் மற்றும் ஓய் வூதிய பில்களுக்கு மாதம் ரூ.19கோடி பல்கலைக்கழ கத்திற்கு தேவைப்படுகிறது.

Leave A Reply