ஈரோடு, பிப். 25- ஈரோடு ரயில் நிலை யம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. ஜோலார் பேட்டை யில் இருந்து உர மூட்டை கள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று, ஈரோட்டிற்கு புறப்பட்டது. நேற்று முன் தினம் இரவு 10 மணியள வில் ஈரோடு ரயில் நிலை யம் அருகே சரக்குகளை இறக்கக்கூடிய யார்டு பகு திக்கு அந்த ரயில் வந்தது. 8-வது யார்டில் இருந்து 10-வது யார்டுக்கு மாறும் போது 8, 9, 10-வது பெட்டி கள் திடீரென தடம் புரண் டன. சத்தம் கேட்டதும், என் ஜின் டிரைவர் ரயிலை உட னடியாக நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் இருந்து பெட்டிகள் விலகி 500 மீட் டர் தூரம் இழுத்து வரப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அதிகாரிகளுக்கு உட னடியாக தகவல் தெரி விக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் மணி வண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர் கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட் டனர். உர மூட்டைகள் உடனடியாக இறக்கப் பட்டு, இரவு 11.45 மணி அளவில் தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத் தில் தூக்கி நிறுத்தப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: