வாஷிங்டன், பிப்.25- இந்தியாவில் உள்ள கால் சென்டர்கள் மூலம் மிரட் டல் விடுத்து அமெரிக்கர் களிடம் அந்நாட்டு நிறு வனம் ஒன்று ரூ.25 கோடி கடன் வசூல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி யுள்ளது. மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கலி போர்னியாவைச் சேர்ந்த “இபீஸ் எல்எல்சி’ என்ற அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்த விவ ரம் வருமாறு:- அமெரிக்காவில் உள்ள இபீஸ் எல்எல்சி நிறுவனம் தன்னை ஒரு கடன் அளிக் கும் நிறுவனம் என்று அறி முகப்படுத்திக் கொண்டுள் ளது. கடன் தேவைப்படு வோர் அணுகலாம் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை அணுகியுள் ளனர். அவ்வாறு அணுகிய வர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், முகவரி, தொலைபேசி எண் உள் ளிட்ட முக்கியமான விவ ரங்களை பெற்றுக்கொண் டுள்ளது. பின்னர் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது என்றும் ஆன் லைனில் விண்ணப்பிக்கு மாறும் கேட்டுக்கொண் டுள்ளது. இதனால் கடன் வாங்க விரும்பியவர்கள் அந்நிறு வனத்தில் ஆன்லைனில் கட னுக்கு விண்ணப்பித்துள்ள னர். ஆனால் அந்நிறுவனம் கடன் வழங்கவில்லை. மாறாக இந்தியாவில் உள்ள சில கால்சென்டர்களை அழைத்து, கடன் கேட்டு விண் ணப்பித்திருந்தவர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து அவர்களை மிரட் டுமாறு கேட்டுக் கொண் டுள்ளது. கடன் வாங்காத வர்களை வாங்கியதாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு அந்நிறுவனம் நிர்பந்தித் துள்ளது. வாடிக்கையாளர் களுக்கு கடன் அளித்தது போல் போலியான ஆவ ணங்களையும் அந்நிறு வனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் உள்ள கால்சென்டர்கள் மூலம் மிரட்டல் வந்ததும் ஏராள மான அமெரிக்க வாடிக் கையாளர்கள், அவர்கள் சொல்லிய தொகையை அமைதியாகச் செலுத்தி விட்டு வந்துள்ளனர். ஆனால் சிலர் மிரட்ட லுக்குப் பயந்து பணத்தை கட்டவில்லை. அவர்கள் துணிச்சலாக அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணை யத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆணையம் நடத்திய விசா ரணையில் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 2010, ஜன வரியில் இருந்து இந்திய கால்சென்டர்கள் மூலம் 10,000 அமெரிக்க வாடிக் கையாளர்கள் மிரட் டப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.25 கோடி அள வுக்கு வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது விசா ரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அமெரிக்க மக்களிடம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய கால்சென்டர்களுக்கும் சர்வதேச அரங்கில் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. இந் திய கால்சென்டர்களை பயன்படுத்துவதற்கு அமெ ரிக்காவில் எதிர்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: