கொச்சி, பிப்.25- கொல்லம் கடல் பகுதியில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலி எண்ணைக் கப்பலில் கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதி காரிகள் சனிக்கிழமையன்று (பிப்.25) ஆயுதங்களைச் சோத னையிட்டனர். இத்தாலி வல்லுநர்கள் முன்னிலையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இத்தாலிய கடற் படைக் காவலர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப் பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கேரள காவல் துறையினர் பறிமுதல் செய்வார்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. கொல்லம் காவல்துறை ஆணையர் தேபேஷ் குமார் பெஹரா, எஸ்ஐடி தலைவர் அஜித் குமார், காவல்துறை அதிகாரிகள், தடயவியல் வல்லுநர்கள், இத்தாலியைச் சேர்ந்த 2 வெடிமருந்து வல்லுநர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் பங்கேற்றனர். இத்தாலி வல்லுநர்கள் முன்னிலையில் ஆயுதச் சோதனை நடத்த கொல்லம் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்தே இந்தச் சோதனை நடவடிக்கை எடுக் கப்பட்டது. இதனிடையே, கொல்லப்பட்ட மீனவர்களில் ஒரு வரான ஜெலஸ்டீனின் மனைவி தொரம்மா இழப்பீடு வழங்க ஆணையிடக்கோரி தாக்கல் செய்த மனுவை விசா ரணைக்கு எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், கப் பலைக் கைப்பற்றி திங்கள் கிழமை வரையில் காவலில் வைத்திருக்க ஆணையிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.