வெண்மணிநகர், (நாகப்பட்டினம்),பிப்.25- தமிழக அரசு மருத்துவமனை களில் அடிப்படைக் கட்டமைப்பு வச தியை மேம்படுத்த வேண்டும். மதுரை இராஜாஜி மருத்துவமனை, சேலம் உயர் சிறப்பு மருத்துவமனை உட்பட அனைத்து மாவட்டப் பொது மருத் துவமனைகளையும் புதுப்பித்து, நவீ னப்படுத்தி தரமான மருத்துவ சேவை யைச் செய்யத் தேவையான அரசு முதலீடுகளை உடனடியாக ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநாடு வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்ப தாவது: தமிழகத்தில் கிண்டி, குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு உயர் ஆராய்ச்சி மையங்கள் பலப்படுத் தப்பட வேண்டும். இவை பொதுத் துறை நிறுவனங்களாகச் செயல்படு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். மக்களுக்குத் தேவையான உயிர் காக்கும் தடுப்பூசி மருந்துகளின் உற் பத்தியை உடனடியாக மீண்டும் தொடங்கிட வேண்டும். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மருத்துவ சாதனங்கள் உப யோகப்படுத்தாமல் உள்ளன. மதுரை இராஜாஜி மருத்துவமனை, சேலம் உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மாவட்டப் பொது மருத் துவமனைகளையும் புதுப்பித்து, நவீ னப்படுத்தவேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. மேலும், சென்னை அடையாறில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வி.ஹெச்.எஸ். அறக்கட்டளை மருத்துவமனையை ஒரு சிலர் தலையிட்டு தனியார் கை களுக்கு மாற்ற முயற்சி செய்வது கண் டிக்கத்தக்கது. இம் மருத்துவம னையை அரசே ஏற்க வேண்டும். கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவமனையை சிறப்புறச் செயல் படுத்த அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாளையங்கோட்டை சித்த மருத் துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி யாண்டில் மாணவர் சேர்க்கை முடிந் தும் வகுப்புகள் துவங்க இந்திய மருத் துவங்களுக்கான அகில இந்திய கவுன் சில் அனுமதி அளிக்கவில்லை. அகில இந்திய கவுன்சிலின் அனுமதியை தாம தமின்றி பெற்று வகுப்புகள் துவங் கப்பட வேண்டும். திண்டுக்கல் உட்பட சில மாவட் டத் தலைநகர்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலி யுறுத்தியுள்ளது. இத் தீர்மானத்தை ஏ.ஆறுமுகநயினார் முன்மொழிய பாலாஜி வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: