வாஷிங்டன்,பிப். 25- அயல் பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அளிக்கும் நிறுவனங்கள் வரி விதிப்புக்குள்ளாகும். இது இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக் கடியை சமாளிக்க முடியாமல் அதிபர் ஓபாமா திணறி வரு கிறார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து பணிகளை வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிறுவனங்களால் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போகிறது. ஆகவே அமெரிக்க பணிகளை செய்யும் வெளிநாட்டு நிறு வனங்களுக்கும் வரி விதிக்கப்படும் என ஓபாமா அறி வித்துள்ளார். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருமளவிலான பணிகளை இந்தியா போன்ற நாடுகள் நிறைவேற்றித் தருகின்றன. இப்போது வரி விதிக்கப் படுவதால் இந்நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேசமயம், வெளிநாடுகளின் மூலம் நிறைவேற்றி வரும் பணிகளை அமெரிக்காவிலேயே திரும்ப நிறை வேற்ற முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு இத் தகைய முடிவை ஒபாமா எடுத்திருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த நட வடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

Leave A Reply

%d bloggers like this: