திருச்சிராப்பள்ளி, பிப்.24- திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 60ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை யில் பள்ளிக்கல்வி, இளை ஞர்நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி “பொன் பாதிரி” என்ற அரிய வகை யான மரக்கன்றை நட்டு வெள்ளியன்று தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சதவீதமே உள்ள வனப்பரப்பை அதிகப் படுத்தும் வண்ணம் வனத் துறையினரால் 1 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த திட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளான வெள்ளியன்று துவங்கி மே மாதம் வரை நடைபெறு கின்றது. அதன்படி, ஸ்ரீரங் கம் அம்மா மண்டபம் சாலை யில் 64 மரக்கன்றுகளும், திருவானைக்காவல் பகுதி களில் 64 மரக்கன்றுகளும், திருச்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 64 மரக்கன்று களும் வெள்ளியன்று நடப் பட்டன. அம் மாமண்டபம் பகுதியில் “பொன்பாதிரி மரம்” என்ற அரிய வகை மரக்கன்றை நட்டு அமைச் சர் என்.ஆர்.சிவபதி திட் டத்தை தொடங்கி வைத்தார். மஞ்சவாகை, மந்தாரை, புங்கன், வேம்பு, தூங்கு வாகை, மரவள்ளி உட்பட 22 வகையான மரக்கன் றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட் சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாநகராட்சி மேயர் அ. ஜெயா, சட்டமன்ற உறுப்பி னர்கள் மு.பரஞ்ஜோதி, ஆர். மனோகரன், டி.பி.பூனாட்சி, திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் பர்வா, மண் டல வன அலுவலர் அன்வர் தீன், துணை மேயர் எம். ஆஷிக்மீரா, கோட்டத் தலை வர்கள் ஜெ.சீனிவாசன், ஆர்.ஞானசேகர், எம்.லதா, செ.மனோகரன், மாமன்ற உறுப்பினர்கள் முத்துலட் சுமி, கே.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி விழா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனையில் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்திற்கான வார்டுஎண்-500ஐஅமைச்சர் சிவபதி திறந்துவைத்தார். மேலும் ரூ.2.15கோடி செல வில் மருத்துவமனை விரி வாக்கப் பணியையும் துவக்கி வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: