உதகை, பிப். 24- வேலைநிறுத்த கோரிக் கைகளை வலியுறுத்தி நீல கிரி மாவட்டத்தில் வாகன பிரச்சார பயணம் நடை பெற்றது. அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை மக்களிடம் விளக்கி கூற மத்திய- மாநில அரசுகள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப் பின் சார்பில் நீலகிரி மா வட்டத்தில் 2 நாட்கள் வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது. பிரச்சார பயணத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எச்.இ. சஞ்ஜீவிராஜ் தலைமை தாங்கினார். முதல் நாள் நடைபெற்ற பிரச்சார பய ணம் உதகை பிங்கர் போஸ்ட் டில் தொடங்கி ஜந்தர் லாந்து, ஏடிசி. சுதந்திர சதுக்கம் ஆகிய பகுதிக ளின் வழியாக உதகை மத் திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பிரச்சார பயணத்தில் என்.நாகேஷ்வரன், எச். கோபால், எல்.ஐ.சி. ஊழி யர் சங்கம் ஆர்.குமார், எஸ்.பார்த்தசாரதி, ஆனந் தன் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் பொ.இராமன் குட்டி, அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் ஆர்.ராஜேந் திரன்,சி.ஐ.டி.யு. எம்.ஏ. வினோத்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வேலைநிறுத்த கோரிக்கை களை விளக்கி பேசினர். 24-ந்நேதி நடைபெற்ற பிரச்சார பயணம் குன் னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் இராமன்குட்டி அரசு ஓய்வு பெற்ற ஊழி யர் சங்கம் , நாகேந்திரன் எல்.ஐ.சி. ஊழியர் சங்கம், டி காந்தி போக்குவரத்து சிஐடியு,தருமன் பெரிய்யா அரசு உழியர் சங்கம் ஆகி யோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.