திருநெல்வேலி, பிப். 24 – பிப்ரவரி 28ல் நடை பெறும் பொது வேலை நிறுத்தத்தை விளக்கி, அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற் றது. நெல்லை அரசுப் போ க்குவரத்துக் கழக தாமிர பரணி டெப்போ முன்பு நடைபெற்ற இந்த வாயிற் கூட்டத்திற்கு அரசு போ க்குவரத்துக் கழக சிஐடியு மாவட்டத் தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமை தாங் கினார். ஏஐடியுசி சங்க தலைவர் குருசாமி முன்னி லை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு போ க்குவரத்து ஊழியர் சங்க நிர் வாகிகள் காமராஜ், சுடலை ராஜ், பணியாளர் சங்க நிர்வாகி உத்திரம், தொமுச பொதுச்செயலாளர் தர்மன், முருகன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், ஆறுமுகம், சுப்பிரமணியன், சந்தானம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் கோவில் பட்டி பணிமனை, தூத்துக் குடி நகர பணிமனை, தென் காசி பணிமனை ஆகிய இடங்களிலும் வாயிற் கூட் டங்கள் நடைபெற்றன.

Leave A Reply