புதுதில்லி, பிப்.24- சென்னை வேளச்சேரி யில் வங்கிக்கொள்ளையர் கள் எனக்கூறப்படும் 5 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமி ழக காவல்துறை தலைமை இயக்குநருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் வெள்ளியன்று ‘நோட்டீஸ்’ அனுப்பியது. பிப்ரவரி 22 நள்ளிரவில் வேளச்சேரியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடந்த “மோதல்” சம்பவத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட் டனர். இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பிவரும் பின்னணியில் ஆணையம் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை மேற் கொள்ள ஆணையிட்டுள்ளது. 8 வாரங்களுக்குள் விசார ணை அறிக்கை அளிக்கப் பட வேண்டும், இறந்தவர் களின் உடல் பரிசோதனை அறிக்கையும் சுயேச்சை யான விசாரணை அறிக்கை யும் அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட் டுள்ளதாக ஆணைய அலு வலர் ஒருவர் தெரிவித்துள் ளார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியில் வந்த புகார் அடிப்படையில் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.