புதுதில்லி, பிப்.24- ரயில் விபத்தில் காலை இழந்த ஒரு பய ணிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நடை முறையில் ஒரு சிறிய வெளிச்சம் கிடைத் திருக்கிறது. தனக்கு நியாயமான இழப்பீடு கோரி மூலைக்கு மூலை அலைந்த அவரது வழக்கை ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வு மன்றம் விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மனுதாரர் திலக் ராஜ சிங், 1987 அக்டோபர் 20 அன்று உ.பி. மாநிலத்தில் மீரட் நகரிலிருந்து லூதியானா நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற பெட்டியில் போதிய விளக்கொளி இல்லை என்பதால், முசாபர் நகர் ரயில்நிலையத்தில் வண்டி நிறுத் தப்பட்டபோது அவர் அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி அடுத்த பெட்டியில் ஏற முயன்றார். அதற்குள்ளாக எச்சரிக்கை ஒலி எழுப்பாமலே ரயில் புறப்பட்டதால் கீழே விழுந்த அவரது காலில் ரயில் சக்கரம் ஏறியது. பின்னர் அவரது கால் மருத்துவமனையில் அகற்றப்பட்டது. தனக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் இழப் பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். மத்திய அரசோ அவருக்கு ரூ.5,000 கருணைத் தொகை வழங்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த அவர், மீரட் நீதிமன்றத்தில் 1990ல் வழக்குத் தொடுத்தார். மீரட் நீதிமன்றம் தனது விசாரணை அதிகார எல்லைக்குள் இந்த வழக்கு வரவில்லை என்று கூறி 2002ல் அவரது மனுவைத் தள் ளுபடி செய்தது. பின்னர் அவர் 2008ல் காஸி யாபாத் நகரில் உள்ள ரயில்வே கோரிக்கைகள் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். தீர்ப்பா யமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து திலக் ராஜ் சிங் 2010ல் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதி மன்ற நீதிபதி, விபத்து நடந்த 21 ஆண்டு களுக்குப் பிறகு வழக்கு தாக்கல் செய்யப்பட் டிருப்பதால் அதைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் காவுல், ராஜீவ் சக்தேவ் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு திலக் ராஜ் சிங்கின் மனுவை எடுத்துக்கொண்டது. தனி நீதிபதியின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனு தாரர் முதன் முதலில் மீரட் நீதிமன்றத்தை உரிய காலத்திற்குள் அணுகியிருக்கிறார் என்று கூறினர். மீரட் நீதிமன்ற ஆவணத்திலேயே இது பதிவாகியுள்ளது. அதைத் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார் என்று சுட்டிக் காட்டிய அமர்வுக்குழு, மார்ச் 12ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வும் ஆணையிட்டது.

Leave A Reply

%d bloggers like this: