புதுதில்லி, பிப். 24 – மேற்குவங்கத்தில் இரண்டு சிபிஎம் தலைவர் களை திரிணாமுல் கட்சி யினர் படுகொலை செய்த தைக் கண்டித்து நாடு முழு வதும் கண்டனங்கள் தெரி விக்கப்பட்டன. எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப் பட்டன. மேற்குவங்கத்தில் கொலைகள் நடந்த பர்து வான் மாவட்டத்தில் கடை யடைப்பும் கொலை எதிர்ப்பு பேரணியும் அமை தியாகவும் வலுவுடனும் நடத்தப்பட்டன. திரிபுரா மாநிலத்தில் 25க்கும் மேற்பட்ட இடங் களில் எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன என்று சிபிஎம் செய்தித் தொடர்பாளர் கௌதம் தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார். திரிணாமுல் மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தது முதல் 58 சிபிஎம் தலைவர்களும் தொண் டர் களும் கொல்லப்பட்டுள் ளனர் என்று அவர் கூறி னார். துர்க்காபூரில் பந்தர் ரோடில் சிபிஎம் தொண்டர் களும் சிஐடியு உறுப்பினர் களும் திரிணாமுல் காங் கிரசின் உருவபொம்மை களை எரித்தனர். திரிணா முல் ஆட்சிக்கு வந்தது முதல் இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் என்று மாவட்டக்குழுச் செயலாளர் ஆர்.ரகு செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் அரசுப் போக்குவரத்துக் கழக அலு வலகங்கள் முன்பு சிஐடியு உறுப்பினர்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர். கோலாரில் சிபிஎம் தொண்டர்கள் அரசு போக்குவரத்து பேருந்து நிறுத்த வட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட் டனர். சிஐடியு உறுப்பினர் களுடன் சேர்ந்து மம்தா பானர்ஜியின் உருவ பொம் மையை எரித்தனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தொண்டர்கள் நடத்தும் வன்முறைகள் 1970களில் மேற்குவங்கத்தில் நடந்த அரைபாசிச சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என்று சிபிஎம் காந்திநகர் மாவட்டச் செயலாளர் நாராயணசாமி வர்ணித்தார். பி.வி.சம்பங்கி, நாகரத்னா, கே.பி.ஆர்.எஸ். மாவட்டச் செயலாளர் டி.எம்.வெங் கடேஷ் ஆகிய சிஐடியு தலை வர்கள் இதில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: