திருப்பூர், பிப். 24- தொடர் மின்வெட் டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின்சார்பில் திருப்பூரில் பல்வேறு மையங்களில் தீ பந்தம் ஏந்தும் போராட் டம் நடைபெற்றது. அவினாசி ஒன்றியத் திற்கு உட்பட்ட பெரி யாயிபாளையம், வடுக பாளையம், நடுவச்சேரி, ஆட்டயம்பாளையம், முத்துச் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் தீப்பந் தம் மற்றும் மெழுகு வர்த்தி ஏந்தி வாலிபர்கள் கண் டன ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் என்.ராமன், கே.ராமசாமி, கே.மகேந் திரன், ஏ.சண்முகம், ஆர். பன்னீர்செல்வம் ஆகி யோர் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மா வட்ட பொருளாளர் ஆர். பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் ஆர்.பாலசுப்பிர மணியம் மற்றும் நிர்வாகி கள் சிவராமன், ஜி.வீரன் ஏ.கருப்பசாமி , ரமேஷ் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மேலும் வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.வெங்கடச்சாலம், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் வி.பழனிச்சாமி, கோவில் பூசாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.சி பழனிச்சாமி, முன் னாள் ஒன்றியக் கவுன்சி லர் கௌரிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: