ஆலங்குடி, பிப்.24- தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் மின் வெட்டைக் கண்டித்து ஆலங்குடி பகுதி விவசாயி கள் கடந்த வாரம் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடத்தி னர்.அதே நாளில் பஸ் மறியல் போராட்ட அறிவிப் பும் வெளியிடப்பட்டது. அதனையொட்டி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் தலை மையில் அனைத்துக் கட்சி களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை முழக்கத்தில் அந்தப் பகு தியே அதிர்ந்தது. மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித் தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டு அந்தப் பகுதியில் நின்று கொண் டிருந்த பொதுமக் களும் திரண்டு வந்து ஆதர வளித்தனர். மறியலில் கலந்து கொண்ட அனைத்து விவ சாயிகளுமே மின்வெட் டால் தாங்கள் படும் இன் னல்களை முழக்கமாக வெளிப்படுத்தினர். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தபட் சம் எட்டு மணிநேரமாவது மின்சாரம் தரவேண்டும். அவ்வாறு தராவிட்டால் அரசேதங்களுக்குவிஷத்தை யாவது தரவேண்டும் என்று ஆவேசமாகக் கூறினர். பின்பு அரசமரம் பேருந்து நிலையம், கே.வி.எஸ் தெரு வழியாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறுதியாக மங்கள மகால் வந்தடைந் தனர்.அங்குபோலீசார்அவர் களை கைது செய்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேக ரன், திருவரங்குளம் ஒன்றி யச்செயலாளர் கே.சிவக் குமார்,ரெ.வெள்ளைச்சாமி, எஸ்.ரெகுநாதன், ராஜலிங் கம், வாலிபர் சங்க திருவரங் குளம் ஒன்றியச்செயலாளர் கே.தினேஷ்குமார், செந்தில் குமார், என்.தமிழரசன், ஆர். ரெத்தினகுமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மா.துரைக்கண்ணு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத்தைச்சேர்ந்த ரெ.சிவ சாமிசேர்வை,மாதவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் சிவசாமி, எ.செல்வம்,ம.தி.மு.கவைச் சேர்ந்த கா.லோகநாதன், எஸ்.குணசேகரன் ,தே.மு. தி.கவைச்சார்ந்த சி.வினோத், நாம் தமிழர் இயக்கத்தைச் சார்ந்த ந.காசிலிங்கம் உள் பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதே நேரத்தில் புதுக் கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக வடகாடு,வெட்டன்விடுதி, கீரமங்கலம், ஆவணம் கை காட்டி, கீரனூர், ஆதனக் கோட்டை உட்பட பல இடங்களில் மறியல் போ ராட்டம் ஆயிரக்கணக் கான விவசாயிகளின் பங் கேற்புடன் நடைபெற்றது. மறியல் போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததைக் கண்டித்தும், கைது செய்தவர்களை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply