புதுதில்லி, பிப். 24 – மாற்றுத்திறனாளி பெண் பயணி, சக்கரநாற் காலியில் வெளியே வர உத வாத ஜெட் ஏர்வேஸ் நிறு வனம், விமானத்திலிருந்து காய்கறி கூடையைத் தூக்கு வது போல, அநாகரிகமாக நடந்து கொண்டது. அஞ்சலி அகர்வால் என்ற பயணி, நரம்பு பிரச்ச னை காரணமான நிற்கவோ அல்லது நகரவோ முடியாத நிலையில் இருந்தார். இத னால் அவர் சக்கரநாற்காலி யிலேயே எங்கும் செல்ல வேண்டியிருந்தது. பிப்ரவரி 20ம்தேதி தில்லியிலிருந்து ராய்பூருக்கு அவர் பயணித் தார். ஸ்பைஸ் ஜெட் விமா னத்தில் மாற்றுத்திறனாளி ஜுஜா கோஷ் என்பவர், அவமானப்படுத்தப்பட்டு இறக்கிவிடப்பட்ட துயர நிகழ்வுக்கு மறுநாள் அஞ் சலி அகர்வால் தனது கொடூர அனுபவத்தை ஜெட் ஏர்பஸ் விமானத்தில் உணர்ந்தார். அவர் தில்லி யில் பயணத்தை துவக்கிய போதே மிக மோசமான அவமரியாதையை விமான ஊழியர்களிடம் பெற்றார். விமானத்தில் பயணிக்கு அனுமதிச்சீட்டை வழங் கும் ஊழியர், நான் பயணம் செல்வதற்கு தகுதி உள்ளதா? என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என அதிர்ச்சியுடன் கேட்டேன். பாதுகாப்பு காப்பீடு ஒப்பந் தத்தில் கையெழுத்திடுமாறு கூறினார். அதற்கு மறுத் தேன். இதில் கையெழுத்து போடாமல் பயணிக்க முடி யாது என, மிரட்டியதால் கையெழுத்துபோட்டேன் என அஞ்சலி குற்றம்சாட் டினார். விதிமுறைப்படி, காப் பீடு பாதுகாப்பு ஒப்பந்தத் தில் பயணியரிடம் எங்கள் ஊழியர் கையெழுத்து பெற் றார். சக்கர நாற்காலி உதவி யுடன் பயணி, தில்லியில் இருந்து ராய்ப்பூர் பயணித் தார். ராய்ப்பூரில், மாற்றுத் திறனாளிகளை இறக்குவதற் கான உபகரணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட் டது என ஜெட் ஏர்வேஸ் விடுத்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: