திருப்பூர், பிப்.24- உடுமலை ஆர்.கே.ஆர். பள்ளியில் மாணவர்களின் தொடர் மரணம் குறித்து விசாரித்திட விசாரணைக் குழு அமைத்திட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக திருப் பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பி னர் த.உமாசங்கர், மாவட் டக்குழு உறுப்பினர் நவீன் லட்சுமணன் ஆகியோர் பேசினர். வாலிபர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல் வாழ்த்திப் பேசினார். முன்னதாக ஆர்ப்பாட் டத்தில் தேர்வு நேரத்தில் தொடர் மின்வெட்டை அமல்படுத்துவதை கை விட வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ண யம் செய்த கட்டணங்க ளுக்கு அதிமாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: