தமிழகத்தில் மதவாத சக்திகள், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி, மதநல்லிணக்கத்துடனும், ஒற்றுமை யுடனும் வாழும் மக்களை மத அடிப் படையில் பிரித்து, துவேஷ உணர்வை உருவாக்கி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத் தில் கன்னி யாகுமரி, கோவை, திருப்பூர், திண் டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல பகு திகளில் மதவாத சக்திகளின் தலை யீடு பொது அமைதிக்குப் பாதகம் உண்டாக்கியுள்ளது. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாதம் ஒன்றையொன்று தூண்டிவிட்டு மக் களிடையே மோதலையும் கலவரத் தையும் நடத்த முயற்சிப்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு கண்டிக்கிறது. மதத்தை அரசியலில் கலப்பதை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி ஏற் றுக்கொள்ளாது. மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளை ஒன்றுதிரட்டி மக் கள் பிரச்சனைகளில் ஒற்றுமையாகத் தலையிடுவதன் மூலமே மதச்சார் பின்மையையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க, மக்கள் ஒற்றுமையைப் பாது காக்க, வகுப்புவாதச் சக்திகளை தனி மைப்படுத்த இந்த மாநாடு உறுதி ஏற் கிறது என்ற தீர்மானத்தை கே.தங்க வேல் எம்.எல்.ஏ முன்மொழிய என். பாண்டி வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: