சேலம், பிப். 24- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசி ரியர், தமிழாசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக் கைக் குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு ஒருங்கினைப்பாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி கல்வி இயக் ககம் தற்போதைய நிலையிலேயே தொடர வேண் டும். 2003ம் ஆண்டுமுதல் அமலில் உள்ள தன்பங் கேற்பு என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய் திட வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் உறுதியளித்தப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இளங்கோ, பொருளாளர் ரவீந்திரன், நகரத்தலைவர் அழகேசன் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழாசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: