மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாடு கேரள மாநி லம் கோழிக்கோடு மாநகரில் ஏப்ரல் மாதம் மிகச்சிறப்புடன் நடைபெற உள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற் றில் இது மிக முக்கியமான திருப்புமுனை யை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந் திய அரசியலில் பெருமுதலாளித்துவக் கட்சிகளாக வலம்வரும் இருபெரும் கட்சி களான காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் மாற் றாக இந்தியாவின் உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு வல்லமை படைத்த சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை முன்நிறுத்துவதற்கும் அதை நோக் கிய பயணத்தில் கட்சியை மிகப்பெரிய அளவிற்கு பலப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் திட்டமிடப்போகும் மாநாடு இது. இந்த மாநாட்டில் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் விவாதிக்கப்பட உள் ளன. ஒன்று, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நவீன, தாராளமயக்கொள்கை களை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கும் இதற்கு முன்பு இதே கொள்கைகளை அமல்படுத்திய பாஜக தலைமையிலான ஆட்சிக்கும் மாற்றாக இடதுசாரி ஜனநாயக மாற்று அணியை அரசியல் அரங்கில் முன் நிறுத்துவது என்பதாகும். மற்றொன்று, இத்தகைய இடதுசாரி ஜனநாயக அணிச் சேர்க்கைக்கு அடிப்படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துத் தளங் களிலும் விரிவுபடுத்துவது, அதன்மூல மாக மக்களுக்கான போராட்டங்களை வலுப்படுத்துவது என்பதாகும். கட்சியின் அடித்தளத்தை விரிவு படுத்துவது, பலப்படுத்துவது என்பது வர்க்க, வெகுஜன அமைப்புகளை மிக வேகமாக, துன்ப துயரத்தில் ஆழ்ந்திருக் கும் ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களிடையே விரி வாக வளர்ப்பதன் மூலமாகவே சாத்திய மாகும். எனவே இந்த மாநாடு தொழிலாளர் கள் மத்தியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரி அமைப்புகளை துரிதமாக வளர்ப்பதற்கான பணிகள் குறித்து, வாய்ப்புகள் குறித்து, வழிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளது. எனவே, இந்த மாநாடு அரசியல் அரங்கில் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள அரசியல் தீர்மானத்தில், காங்கி ரஸ்-பாஜக அணிகளுக்கு மாற்றாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்த ஒரு மாற்று அணியே நாட்டு மக்களின் துன்ப, துயரங் களைத் தீர்க்கக்கூடிய ஆட்சியை வழங்க முடியும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த இருபெரும் அணி களுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து கடந்த காலங் களில் முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிற பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும், காங்கிரசும் பாஜகவும் முன் வைக்கிற அதே கொள்கைகளைத்தான் தழுவிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றுவது அல் லது இத்தகைய கொள்கைகளை தீவிரமாக அமலாக்குகிற காங்கிரஸ் அல்லது பாஜக அணிகளின் ஆட்சிகளை எதிர்க்காமல் இருப்பது அல்லது இந்த அணிகளோடு மாறி மாறி சேர்ந்துகொள்வது என்ற நிலை யைத்தான் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் எடுத்து வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவாதிக்க இருக்கிற இடதுஜனநாயக அணி என்பது, நாட்டின் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் அடிப்படைப் பிரச்சனை களைப் பேசுவதாக, பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க குரல்கொடுப்ப தாக, தொழிற்சங்க உரிமைகளை வற்புறுத் துவதாக, துயரத்தின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை மீட்டெடுக்க மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதாக, சுகாதாரம், கல்வி, பெண்கள் நலன், சிறு பான்மையினர் நலன், தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் நலன் போன்ற பல் வேறு சமூகப்பிரச்சனைகளின் முற்போக் குக் கொள்கைகளை அமல்படுத்துவதாக இருக்கும். இந்தப் பொதுவான அம்சங்களில் இடதுசாரிக் கட்சிகளோடு ஒத்துப்போகிற, தாங்களும் இதே கோட்பாடுகளுக்காக நிற்கக்கூடிய அரசியல் சக்திகளோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றும். இன்றைக்கு இந்தியா வில் அப்படிப்பட்ட பிராந்திய முதலாளித் துவக் கட்சிகள் எதுவுமில்லை. அப்படி யானால் இடையில் தேர்தல்கள் வரலாம், போகலாம் என்ற நிலையில் , மேற்கூறிய அம்சங்களில் இடதுசாரிக் கட்சிகளின் பொதுவான நிலைபாட்டை அங்கீகரிக்கிற சக்திகளோடு அவ்வப்போது எழக்கூடிய சூழ்நிலைகளின் அடிப்படையில் தேர்தல் உடன்பாடுகள் செய்துக்கொள்ளப்படும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் இலக்கு என்பது இடது ஜனநாயக அணியை இந்தியாவில் உரு வாக்கி, ஒரு மகத்தான மாற்று சக்தியாக மக்கள் முன் நிறுத்துவதே. தமிழகத்தில் இயல்பாகவே, ஏராள மான தலித் அமைப்புகள், சிறுபான்மை யினரின் அமைப்புகள் போன்றவை செயல்படுகின்றன. அவர்கள் அம்பேத் கரை உயர்த்திப்பிடிக்கிறார்கள்- பெரி யாரை உயர்த்திப்பிடிக்கிறார்கள் – காரல் மார்க்ஸையும் உயர்த்திப்பிடிக்கிறார்கள்- இவர்கள் அனைவருமே சமூகத்தில் மிக வும் ஒடுக்கப்பட்ட, இன்றைக்கு நமது நாட்டில் மிகப்பெரும் தாக்குதல் தொடுத் துள்ள நவீன தாராளமயக் கொள்கை களால் வாழ்வாதாரம் இழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை யினர், பெண்கள், குழந்தைகள், சிறுவியா பாரிகள்,சிறுதொழில் முனைவோர், நடுத் தர வர்க்க ஊழியர்கள் என பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த மக்களுக்காக தங்களது அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். எனவே, இயல்பாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் நிறுத்துகிற இடது சாரி ஜனநாயக மாற்று அணியில் இந்த சக்திகள் இணைந்துகொள்வதற்கு சாத்தி யமானவையே. இத்தகைய அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கக்கூடிய கோரிக்கை களையும், கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில் அவர்களை ஈர்க்கும் வகையில் நமது பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்தத் தளங்கள் அனைத்திலும் விரிவுபடுத்த வேண்டும். அதே போல இந்த மாநாட்டில் சில தத்துவார்த்தப்பிரச்சனைகள் மீதான நமது கட்சியின் நிலைபாடு குறித்த தீர்மானமும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள் ளது. இந்தியாவில் பின்நவீனத்துவம் என்ற கோட்பாட்டை முன்நிறுத்தி தத்து வார்த்த ரீதியான தாக்குதல் இடதுசாரி களுக்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. ஆட்சியாளர்கள் அமலாக்கும் நவீன தாராளமயக்கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வரும் பல்வேறு பிரிவு மக் கள் இடதுசாரிகளின் பின்னால் அணி திரண்டு விடக்கூடாது என்ற நோக்கத் தில் பின்நவீனத்துவம் பேசும் சக்திகள் அடையாள அரசியலை முன்நிறுத்து கின்றன. இது இந்தியாவில் புரட்சிகரமான மாற் றம் ஏற்படுவதற்கு எதிராக இருக்கும். எனவே, இத்தகைய தத்துவார்த்தத் தாக் குதல்களை எதிர்கொள்ளும் விதமாக, அவர்களால் அடையாளப்படுத்தப்படும் மக்கள் பிரிவினரை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும், அவர்களை நமது வர்க்க, வெகுஜன அமைப்புகளின் போராட்டங் களில் திரட்டுவதும், அவர்களுக்கு அரசி யல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாகப் புரி தலை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கிய மானது. அந்தப்பணியை செய்வதற்கு உரிய வழிமுறைகளை கோழிக்கோடு மாநாடு வகுக்கும். – சந்திப்பு : எஸ்.பி.ராஜேந்திரன், – படம் : ஜாபர்

Leave a Reply

You must be logged in to post a comment.