வெண்மணிநகர்( நாகை), பிப். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டில் பாரதிபுத்த காலயத்தின் சார்பில் நூல்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படு கிறது. 540 ரூபாய் மதிப்புள்ள புரட்சி யில் பகுத்தறிவு நூல் மாநாட்டு அரங் கில் ரூ. 400 க்கும், வரலாறு, சமூகம், நில உறவுகள்,நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்,விடுதலைப்போராட்டம் ஆகிய நூல்கள் 480 ரூபாய்க்குப் பதில் 300க்கும்விற்பனைசெய்யப்படுகின்றன. நஜ்ரூல் என்றொரு மானுடன், பிரண்ட் லைன் கட்டுரைகள், டி.டி.கோசாம்பி வாழ்வு, வரலாற்றில் தனிநபர் என்ற நூல்களின் விலை 280 ரூபாயாகும். இந்நூல்கள் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிரில்லியனுக்கு எத்தனை சைபர், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற நூல்கள் 295 ரூபாய்க் குப் பதில் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் படுகிறது. 101 கேள்விகள், கிராமப்புற உள்ளாட்சி, ஓரடி முன் னால் ஆகிய நூல்கள் 90 க்குப்பதில் 50 ரூபாய்க்கும், தோழர் என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாறு, தோழர் என்.வரத ராஜன் வாழ்க்கை வரலாறு, தோழர் சுர்ஜித் வரலாறு ஆகிய நூல்களின் விலை 190 ரூபாயாகும். 100 ரூபாய்க்கு இந்த நூல்கள் விற்பனை செய்யப்படு கின்றன. சிங்கார வேலர், இந்திய கம்யூ னிஸ்ட் இயக்க வரலாறு ஆகிய நூல் களின் விலை 380 ரூபாயாகும். இந்த நூல்கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகின்றன.செங்கொடியின்பாதையில் நீண்ட பயணம் -கோ.வீரய்யன் வாழ்க்கை வரலாறு நூல் ரூ. 100 க்கும், இந்திய விடுதலைப்போராட்ட வர லாறு என்ற நூல் ரூ. 350 க்கும் விற் பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.