பெங்களூர், பிப். 24 – இந்துமதத்தை திணிக்கும் வகையில் பாடப்புத்தகங் களில் பாடங்கள் இடம்பெறுவதை கண்டித்து, 14 அமைப்பு களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், கர்நாடக மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலகம் (டிஎஸ்இஆர்டி) முன் பாக வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), இந்திய தேசிய மாண வர்கள் அமைப்பு (என்எஸ்யுஐ), டிஒய்எப்ஐ மற்றும் மாண வர்கள் அமைப்புகள் கல்வி அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தின. பாடப்புத்தகங்களில், சில பகுதிகளில் இந்துமத தத்துவத்தை புகழ்ந்துரைப்பதை கண்டித்து, அவற்றை நீக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். சங்கபரிவாரின் வேலையால் இதுபோன்று, பாடப்புத்தகத் தில் மதப்பிரச்சாரம் இடம்பெற்றுள்ளது என எஸ்எப்ஐ மாநி லத் தலைவர் அனந்த் நாயக் தெரிவித்தார். உள்ளூர் வரலாறு மற்றும் புவியியல் பாடம் விவரமும் பாகு பாடு கொண்டதாக உள்ளது. சில மாவட்டங்கள் 3 பக்கங் களுக்கு மேல் உள்ளன. ஆனால் ராமநகரம், சித்ர துர்கா, தோவன்கரே மாவட்டங்கள் பற்றி 3-4 வரிகள்தான் இடம் பெற்றுள்ளன. இந்தப்புத்தகத்தை தயாரித்த ஆசிரியர் இந்த மாவட்டங்களைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை என அனந்தநாயக் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: