புதுதில்லி, பிப்.24- பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது வீடுகளில் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) வெள்ளியன்று (பிப்.24) காலை யில் சோதனை நடத்தியது. சட்டப்பூர்வ வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத் துக் குவிப்பு தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. தாத்ரா – நாகர் ஹவேலி மக் களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர் நாதுபாய் கோமன் பாய் பட்டேல். அறிவிக்கப்பட்ட வருமான வழிகளுக்குப் பொருந்தாத வகையில் பல மடங்கு சொத்துகள் குவித் திருப்பதாகக் கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள், தில்லி யின் சவுத் அவென்யூ பகுதி யில் உள்ள அவரது வீட்டிலும், சில்வாசா பகுதியில் உள்ள வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தினர். இது குறித்து செய்தியாளர் கள் கேட்டபோது, சோதனை கள் நடத்தப்படுவது உண்மை தான் என்றும், ஆனால் எதற் காக அந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது தமக்குத் தெரியாது என்றும் பட்டேல் பதிலளித்தார். மக்கள வைக்கு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டவரான இவர், உள்துறை அமைச்சகத் திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பின ராகவும் இருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.