நாமக்கல், பிப். 24- பள்ளிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்ட பிறகும் பயன்படுத்த முடி யாத நிலையின் காரண மாக நூலகத்தில் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது பெருமாள் மலை கிராமம். இப்பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் சுமார் 40 குழந்தைகள் நான்கு நிலைகளில் கல்வி கற்று வரு கின்றனர். இவற்றில் பெண் குழந்தைகள் மட்டும் 23 பேர் உள்ளனர். மேலும், மாற்றுத் திறனு டைய குழந்தைகள் இரு வரும் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இதில் பெரும்பாலான குழந் தைகளின் பெற்றோர்கள் விசைத்தறி உள்ளிட்ட கூலித்தொழில்களில் ஈடு பட்டு வருகின்றனர். இப்பள்ளி துவங்கப் பட்ட ஆரம்பகாலத்தில் சொந்தமான கட்டிடம் இல் லாததால் அருகிலுள்ள நூலகத்தில் பள்ளி செயல் பட்டு வந்தது. இதன் பின் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் துவக்கப்பள்ளிக்கு சொந்த மாக கட்டிடம் கட்டப்பட் டது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு பல மாதங் கள் கடந்த விட்டபிறகும், முறையாக திறப்புவிழா காணப்படாதால் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதன் கார ணமாக பள்ளி நூலகத் திலேயே தொடர்ந்து செயல்படும் நிலை ஏற் பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப் பறை மற்றும் விளையாட்டு மைதானம் என எத்தகைய அடிப்படை வசதிகளும் கிடையாது. மேலும். மாணவ, மாணவிகளுக் காக சத்துணவுத் திட்டத் தின் படி அளிக்கப்படு கின்ற மதிய உணவு மற் றும் இலவச சீருடைகள் என எதுவும் அளிக்கப்படு வதில்லை. இவற்றிலும் மிக கொடி யதாக நூலகப் பள்ளியில் கரும்பலகை வைப்பதற்கே இடமின்றி கல்வி கற் கும் நிலை காணப்படுகிறது. அர சின் சார்பில் அளிக்கப்படுகின்ற இலவச பாடப்புத்தகங்கள் மட் டும் தரப்படுகின்றன. ஒரே கட்டிடத்தில் துவக்கப்பள்ளி மற்றும் நூலகம் ஆகிய இரண்டும் இயங்கி வருவதால் பள்ளி செயல்படும் நேரத்தில், நூலகத்தினை செயல் படுத்த முடிவதில்லை. இதன்காரணமாக பள்ளி விடுமுறை நாட்கள் மற் றும் சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டுமே நூல கத்தை வாசகர்கள் பயன் படுத்த முடிகிறது. எனவே. பல மாதங்க ளுக்கு முன்பே கட்டிமு டிக்கப்பட்டு திறக்கப்படா மல் உள்ள பள்ளியை உட னடியாக திறந்து செயல் படுத்திட வேண்டும். மேலும். இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரு வதுடன், சத்துணவு திட் டத்தை அமல்படுத்த வேண்டும். இத்தகைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட் டுமே, அப்பகுதியில் உள்ள விவசாய மற்றும் விசைத் தறி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்ப தற்கான அமைதியான சூழலை ஏற்படுத்திட முடி யும். இவற்றிக்கான நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக் கை விடுக்கின்றனர். -ந.நி.

Leave a Reply

You must be logged in to post a comment.