வெண்மணிநகர் (நாகை), பிப்.24- பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை நிறைவேற்றுவதற்கு மாநில அளவில் தனி நிர்வாக அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. நாகையில் நடைபெறும் மாநில மாநாட்டில் புதனன்று நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் பற்றிய முழு விரபங்களைச் சேகரிக்க வேண்டும். பெருந்தனக்காரர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து அரசு தரிசு நிலங்களையும் தயக்க மின்றி மீட்டு, நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்கிட வேண்டும். இவ் வாறு வழங்கும் போது தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். ஏற்கனவே நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் சாகுபடி செய்து வரும் அரசு தரிசு நிலங்களை சட்டவரம் பிற்கு உட்பட்டு அவர் களுக்கே பட்டா வழங்கிட வேண்டும். விவசாயிகளுக் குச் சொந்தமான தரிசு நிலங்களை அவர்களது விருப்பத்தின்படி சாகு படிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி அவர்களுக்கே திரும்ப அளித்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் போர்க்கால அடிப் படையில் மனைப்பட்டா வழங்கிட வேண்டும். இதற்கென சிறப்பு நிதி ரூ.1000 கோடியை தமிழக அரசு ஒதுக் கிட வேண்டும். பலவகை அரசு புறம் போக்கு மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண் டும். பயனற்ற நீர்நிலைகளில் குடி யிருப்போருக்கு பட்டா வழங்குவது டன் பயன்பாட்டில் உள்ள நீர் நிலைப் பகுதிகளில் குடியிருப் போருக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும். நடைபெற்றுள்ள நிலமோசடிகள் குறித்த வழக்குகளை சிபிசிஐடி பிரி வுக்கு மாற்றி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்சவரம்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விதி விலக்குகளை ரத்துச் செய்து புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்ற வேண் டும். பினாமி ஏற்பாடுகளை கண் டறிந்து உபரி நிலங்களை கைப்பற்றி தகுதியான பயனாளிகளுக்கு வழங் கிட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங் கள், தொழிற்சாலை போன்றவற்றிற்கு விளைநிலங்களைக் கையகப்படுத் தக்கூடாது. விவசாய விளை நிலங் களை வேறு பணிகளுக்கு மாற்று வதைத் தடுக்கும் வகையில் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். கோவில், மடங்கள், அறக்கட் டளைகளுக்கு சொந்தமான நிலங் களுக்கு ஒரு விலையை தீர்மானித்து அத்தொகையினை சாகுபடியாளர்களி டமிருந்து தவணை முறையில் பெற் றுக் கொண்டு, நிலங்களை சாகுபடி யாளர்களுக்கே சொந்தமாக்க வேண்டும். இதே போன்ற நட வடிக்கை கோவில், மடங்கள், அறக் கட்டளைகளில் குடியிருப்போருக் கும், விலையைத் தீர்மானித்து, தற் போது குடியிருப்போரிடம் பெற்றுக் கொண்டு வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஜி.மணி முன்மொழிய என்.எல்.சீதரன் வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: