மாநில மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதி நிதிகளுக்கு மெரீனா ஆறுமுகம் உணவளிக் கும் பணியை மேற்கொண் டுள்ளார். இவர் நீண்டகால மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். இவரது தலைமையில் 60 பணியாளர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரீனா ஆறுமுகம், கடந்த 15 ஆண்டுகளாக கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளுக்கு உணவு தயாரிக்கும் பணியைச் செய்துள்ளார். உணவு தயாரிப்புத் தொழி லில் ஈடுபட்டுள்ள இவருக்கு மதுரை, பட்டுக்கேட்டை உள்ளிட்ட நகரங்களில் உணவகங்களும் உள்ளன. இங்கெல் லாம் என்னென்ன உணவுகள் தயாரிக்கவேண்டும். உண வின் தரம், சுவை ஆகியவை பற்றி அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டறிவேன். தேவைப்படும்போது நேரில் சென்று வருவேன். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு என்றால், நானே நேரடியாக வந்து களத்தில் நின்று, பணியாற்றும் ஊழியர்களில் நானும் ஒருவனாக இணைந்து பணியாற்று வேன். இது எனக்கு மன நிறைவாக உள்ளது. இப்பணியில் எனக்கு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாராயணன், சண்முகம் ஆகியோர் உதவி செய்து வருகிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் வந்து நானும் ஒரு ஊழியனாக பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: