வெண்மணிநகர், (நாகை), பிப்.24- சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தேமுதிகவை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவு செய் துள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் கூறினார். நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் தீர்மானங் களை விளக்கி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெள்ளியன்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தங்க ளுக்கு ஆதரவளிக்க வேண் டும் என அக்கட்சியின் நிறு வனர் விஜயகாந்த், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை கட்சியின் மாநிலக் குழு பரிசீலித்தது. சங்கரன் கோவில் தேமுதிக வேட் பாளரை ஆதரிப்பது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மத்தி யில் ஆட்சியில் உள்ள காங் கிரஸ் தலைமையிலான அரசு சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீடு,தேசிய நதிநீர்க்கொள்கை, பெட் ரோல் விலை உயர்வு என மக்களுக்கு எதிரான நட வடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுகவிற்கும் இதில் பங்கு உண்டு. தமிழகத்தில் ஆட் சிக்கு வந்த அதிமுக அரசி டம் மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பஸ் கட்டணம், பால் விலை , உத்தேச மின் கட்டணம்ஆகியவற்றை உயர்த்தி அந்த நம்பிக் கையை பொய்யாக்கி உள் ளது. அதே போல சட்டம் – ஒழுங்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. ஆக வே சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக வை ஆதரிப்பது என முடிவு செய்தோம் என்று ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். இலங்கை சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்க! இலங்கைத்தமிழர் நலன் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், இலங்கையில் ராணுவத்திற்கும் விடு தலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து மூன்றாண்டு முடி யப்போகிறது. ஆயுத மோதல் முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் பிரச்ச னைக்குத் தீர்வு காண்பதாக இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதி அமலாகவில் லை. இலங்கைத் தமிழர் களின் துயரம் இன்னும் தொடர்கிறது. போர்க் காலத்தில் மனித உரிமை களை மீறி வன்செயல்கள் புரிந்திட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் மீது, நேர்மையான விசாரணை நடத்திடவும் , குற்றவாளி கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் இலங்கை அரசு மறுத்து வருகிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்விடங் களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறு கின்றன. அவர்களின் புனர் வாழ்விற்கான, மீள் குடி யேற்றத்திற்கான நடவடிக் கைகள் போதுமான அளவு நடைபெறவில்லை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மை யாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள வர்களை குடியமர்த்திட இலங்கை அரசு முயற்சிக் கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் ஆயுத மோதல் காலத்திலும் அதற்கு முன்பும் இலங்கை ராணுவத்தால் கைது செய் யப்பட்டு, இன்றைக்கும் சிறையில் இருக்கக் கூடிய வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் தமிழர்கள் வாழக் கூடிய பகுதிகளில் இன்றும் ராணுவ நிர்வாகம் தொடர் கிறது. உடனடியாக ராணு வம் விலக்கிக் கொள்ளப் பட்டு சிவில் நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் தீர்வு காண வேண்டும் இலங்கைத் தமிழர் களின் பிரச்சனைகள் குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடை யே 11 முறை பேச்சுவார்த்தை நடந் துள்ளது. ஆனால் எந்த வித முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தை நடைபெறு கிற போதே இலங்கை அரசு இந்தப் பிரச்சனையை நாடா ளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு விடுவது என்று முடிவு செய் திருக்கிறது. இலங்கை அர சின் இம்முடிவு பிரச்சனைக் குத் தீர்வு காண உதவாது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, நிலம், காவல் துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தஸ்துடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும், இலங்கை யில் தமிழ் மொழி, தமிழர் களுக்கு சமவாய்ப்பு, சம உரிமைகளுடனான பாது காப்பு ஆகியவற்றை காக்கும் விதத்திலும், சட்டத்திருத்தம் செய்திட இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங் கைத் தமிழர் பிரச்சனை களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இலங்கை அரசை நிர்ப்பந் திக்க இந்திய அரசின் தலை யீடு போதுமானதாக இல்லை. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அர சியல் தீர்வு காணவும், போர்க்காலத்தில் பாதிக் கப்பட்ட பல்லாயிரக்கணக் கான தமிழர்களுக்கு நிவார ணங்கள் கிடைத்திடவும், மீள் குடியேற்றம் துரிதமாக நடைபெறவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண் டுமென அவர் கூறினார். மாநாட்டுப்பேரணியில் 2 இலட்சம் பேர் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணி பிப்ர வரி 25 ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி நடை பெறும் மாபெரும் பேரணி யில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாகவும் ஜி.ராம கிருஷ்ணன் குறிப்பிட்டார். இப்பேட்டியின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பால கிருஷ்ணன், பி.சம்பத், மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து, நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகை யன், சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி ஆகி யோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.