மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தமிழ்நாடு மாநில மாநாட் டிற்கு நான் வந்ததன் நோக்கமே தமிழகத்தின் அரசியல் மற்றும் வெகுஜன அனுபவங்களைத் தெரிந்து கொள்வதற்குத்தான். இரண்டு மாநிலங்களும் அண்டை மாநிலம் என்பதோடு மட்டுமல் லாமல், ஒரேமாதிரியான பிரச்ச னைகள் பலவற்றை எதிர் கொண்டு வருபவையாகும். தமிழ கத்தில், இரண்டு பெரிய பிராந்தியக் கட்சிகள் பிரதானக் கட்சிகளாக உள்ளன. அதேபோல், ஆந்திரா விலும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிளோடு சில சமயங்களில் தேர்தல் உடன்பாடு வைத்திருக்கிறோம். இங்குள்ள நிலைமைகள், அனுபவங்களின் மூலம் பெறப்படும் பாடங்கள் ஆந் திரப் பிரதேச கட்சிக்கு நிச்சயமாக உதவும். சமூக நீதிக்கான போராட்டம் இரண்டாவதாக, தலித்துகள் மத்தியில் தமிழகத்தில் பெரிய அளவிலான பணியை கட்சி செய்து வருகிறது. இந்தப் பணியை ஆந்திராவில் மேலும் முன்னெடுத் துச் செல்லும் வகையில் இந்த அனுபவங்கள் எங்களுக்கு உத்வே கம் அளிக்கும். ஆந்திராவில் 1992 ஆம் ஆண்டு முதல் நாங்கள் தலித் துகள் மத்தியில் பணியாற்றி வரு கிறோம். அதற்கென்று தனியாக அமைப்பொன்றை உருவாக்கி பல பலன்களைப் பெற்றுள்ளோம். மாநில அளவிலான எஸ்.சி மற்றும் எஸ்.டி. ஆணையம் ஒன்றை அமைக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளோம். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டத்தைக் கண் காணிக்கும் அதிகாரபூர்வக்குழு ஒன்றை அமைக்கச் செய்திருக் கிறோம். தலித்துகள் வாழுமிடங் களின் மேம்பாட்டிற்காக விரிவான வளர்ச்சித்திட்டத்தை உருவாக்கு மாறு அரசை நிர்ப்பந்தித்தோம். இவ்வளவு இயக்கங்களையும் தாண்டி, மாநிலத்தில் தீண்டா மைக் கொடுமை இன்றும் இருக் கிறது. இந்த அநீதிக்கு எதிராக தொடர்ச்சியான இயக்கங்களை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளன. ஆனால், எங்கு தீண்டா மைக் கொடுமை நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நேரடியான போராட்டங்களை நடத்தி உடனடி யான நடவடிக்கை மேற்கொள்ளச் செய்கிறோம். இதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், தலித் சமூகத்தில் உள்ள முன்னே றியவர்கள் இன்னும் நிலப்பிரபுத் துவ மற்றும் முதலாளித்துவக் கருத்துகளின் பிடியில்தான் உள்ள னர். அதனால்தான், சமூக நீதி என் பதற்கான கோரிக்கையை அவர் கள் முன்வைத்தாலும், அதற்காகப் போராட முன் வருவதில்லை. நமது போராட்டங்களை அவர்கள் பாராட் டினாலும், போராட்டக் களத்தி லிருந்து விலகி நிற்கிறார்கள். இதனால்தான், தலித் சமூகத்தி லிருந்து தலைமைப் பொறுப்புக்கு வருவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வதற்காக, தலித் மாணவர்கள் மத்தியில் நாம் கவனம் செலுத்துகிறோம். இந்தப் பணியில் ஆசிரியர்களை நாம் பயன்படுத்துகிறோம். தலித்துகள் எந்தத் துறையில் அதிகமாக வேலை செய்கிறார்களோ, குறிப் பாக விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் நாம் கவனம் செலுத்து கிறோம். கிராமப்புறத்தில் உள்ள தலித் தொழிலாளர்கள், பிழைப்புக் காக நகர்ப்புறங்களை நோக்கி நகர்கிறார்கள். இந்தத் துறைகளில் பணியாற்றுவதற்காக, தலித் ஊழி யர்களைப் பயிற்றுவிக்கிறோம். தமிழகத்திலும் இதுபோன்ற பிரச்ச னைதான் உள்ளது என்று நம்பு கிறேன். தனித்தெலுங்கானா ஆந்திராவில் நமது கட்சி தனித்தெலுங்கானா பிரச்சனை யை எதிர்கொள்ள வேண்டியிருக் கிறது. கொள்கை ரீதியாக, நாம் பிராந் தியவாதத்தை எதிர்க்கிறோம். ஒன்றுபட்ட ஆந்திரா என்ற அம்சத் தில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால், மக்களின் கருத்தோ தனித்தெலுங்கானாவுக்கு ஆதர வாக உள்ளது. மக்களின் மன வோட்டத்திற்கு எதிராக நாம் நீந்த வேண்டிய கட்டாயத்தில் உள் ளோம். இந்த சிரமமான சூழலிலும், நிலைமையை சமாளிப்பதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். மக்க ளோடு, மக்களாக கட்சி இருக் கிறது. மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்த மற்ற கட்சிகள் முயற்சித்தாலும், மக்களோடு இருக்கும் வகையில் பல உத்தி களைக் கடைப்பிடித்துள்ளோம். கட்சிக்கல்வியில் நாம் கவனம் செலுத்தினோம். கட்சி ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த வித ஊசலாட்டமும் ஏற்பட்டு விடாதபடி, இதைக் கொண்டு சென்றோம். அதனால்தான், இவ் வளவு சிரமங்களுக்கிடையிலும் தெலுங்கானா பகுதியில் உறுதி யான ஒற்றுமையைக் கட்டியுள் ளோம். அப்பகுதியில் கட்சியும் முன்னேறியுள்ளது. மற்றொரு உத்தி என்னவென் றால் உள்ளூர் மட்டத்தில் சிறிய அளவிலான மக்களின் பிரச்சனை களில் கவனம் செலுத்தினோம். தனித்தெலுங்கானா என்ற பெயரில் அன்றாடப் பிரச்சனைகளை மற்ற கட்சிகள் அலட்சியப்படுத்திவிட் டன. தெலுங்கானாவில், நமது வெகுஜன அமைப்புகளை முன் னிறுத்தி, தொழிலாளர்கள், தலித்து கள், பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்களை பெரிய அள வில் திரட்டியுள்ளோம். அதனால் தான் தற்போது தெலுங்கானாவில் இந்தச் சூழலிலும் நமது அமைப்பு கள் விரிவடைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், எதிர்மறையான சூழலையே கட்சி எதிர்கொண்டு வருகிறது. ஒரு புறம் தனித்தெலுங்கானா என்ற கோரிக்கை. மறுபுறத்தில் ஆட்சி யாளர்களின் ஒடுக்குமுறை. பொது வாக சிரமங்களை வாய்ப்புகளாக கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தான் நாம் இங்கு செய்திருக்கிறோம். ஏராள மான அரசியல் பயிற்சி முகாம் களை நடத்தினோம். கல்வி வட் டங்கள் பெரிய அளவில் நடை பெற்று வருகின்றன. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கல்வி வட்டங்கள் நடக்கின் றன. எந்தக் காரணத்தை முன் னிட்டும் அதில் இடைவெளி ஏற் படுவதில்லை. இளம் கம்யூனி ஸ்ட்களுக்கான வகுப்புகள் தனி யாக நடக்கின்றன. 30 வயதுக்குக் கீழ் உள்ள 150 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சவால் களை எதிர்கொள்ள இவை கட் சிக்கு உதவியுள்ளன. மின்வெட்டு மின்வெட்டுப் பிரச்சனையில் ஆந்திராவிலும் இதே பிரச்சனை தான் உள்ளது. தமிழகத்தில் உள்ள மின்வெட்டு விரைவில் ஆந்திராவி லும் வரப்போகிறது. மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வடிவங் களில் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வகை யில் ஆந்திர அரசு திட்டமிட்டுள் ளது. ஆந்திரா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டிலுமே தனியார் மற்றும் வணிக ரீதியான மின்னுற் பத்தி நிலையங்கள் இருக்கும் நிலைமையை அலட்சியப்படுத்தி வருகின்றன. மக்கள் நலன் சார்ந்த மின்கொள்கையை உருவாக்க இதுவே சரியான நேரம். ஆந்திரா வில் மாற்று மின்கொள்கை ஒன் றை உருவாக்கி, அதை முன்னி றுத்தியுள்ளோம். மதுபான விற்பனை ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமான அளவு மதுபான விற்பனை இருக் கும் போலிருக்கிறது. இதன் மூலம் இரண்டு மாநிலங்களிலும் ஏராள மான வருமானம் வருகிறது. எங் கள் மாநிலத்தில் இந்த வியாபாரத் தை தனியார் செய்கிறார்கள். அவர் களும் ஆட்சியாளர்களும் கூட் டுக் கொள்ளை அடிக்கிறார்கள். இங்கு மதுபான விற்பனையை அரசே செய்கிறது. பாதிப்புகளைப் பொறுத்தவரையில், இரண்டு மாநிலங்களிலுமே ஒரே மாதிரி யானதாகவே உள்ளது. இதுகுறித் தும் நாங்கள் மாற்றுக் கொள்கை ஒன்றை முன்வைத்துள்ளோம். தன்னெழுச்சியாகப் பெண்கள் பல இடங்களில் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். கட்சியும் இதைப் பெரிய அளவில் எடுத்துக் கொள்ள உள்ளது. நிலம் மற்றும் குடிமனைப்பட்டா குடிநீர் விநியோகம், சாக்கடை வசதி, குப்பைகளை அகற்றுதல், பூங்காக்களை வாடகைக்கு விடு தல், நுகர்வுக்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகள் நகர்ப்புற மக் கள் மீது சுமத்தப்படுகிறது. அழகு படுத்துதல் என்ற பெயரில் ஏழை மக்கள் நகரை விட்டு வெளியேற் றப்படுகின்றனர். வீடு, வீட்டுமனைப்பட்டா மற் றும் நிலம் ஆகிய பிரச்சனைகளில் நாம் பெரிய இயக்கங்களுக்கு திட்ட மிட்டு வருகிறோம். இதுபோன்ற பிரச்சனைகளில் தமிழகத்தின் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டு அவற்றை ஆந்திராவுக்கு ஏற்ற மாதிரி நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். சந்திப்பு: கணேஷ் படம்: ஜாபர்

Leave a Reply

You must be logged in to post a comment.