வெண்மணிநகர், (நாகை) பிப்-24- தமிழை ஆட்சி மொழி யாக, நீதிமன்ற வழக்கு மொழி யாக, கல்வித்துறையில் பயிற்று மொழியாக ஆக்க வேண் டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமி ழகத்தில் ஆட்சித் துறையில் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக முழுமையாகத் தமிழ் இன்னும் நிலைபெற வில்லை. இது ஆழ்ந்த கவ லையளிக்கும் நிலைமையா கும். உள்ளாட்சி நிர்வாகத் தில் கூட அரைகுறையா கவே தமிழ் தொடர்வதும் நீடிக்கிறது. டி.என்.பி.எஸ்.சி – தேர்வாணைக்குழு விளம் பரம் தமிழ் நாளிதழ்களில் கூட ஆங்கிலத்தில் தான் வரு கிறது. ஆட்சி மொழியாகத் தமிழே நிலைபெற தமிழக அரசு அரசியல் உறுதி யுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கீழ் நிலை நீதி மன்றங்களில் இருப்பது போல உயர்நீதிமன்ற விசா ரணைகளிலும் தீர்ப்புகளி லும் வழக்கு மொழியாக வும், அலுவல் மொழியாக வும் தமிழே இருக்க வேண் டும். தமிழ் மக்களின் இந்த நெடுங்கால விழைவை ஏற்று மத்திய அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் தமிழை நீதிமன்ற மொழியாக ஆக் கிட இம்மாநாடு வலியுறுத் துகிறது. பயிற்று மொழியாகத் தமிழைக் கொண்டு வர எந்த வித அக்கறையான முயற்சி யும் எடுக்கப்படவில்லை. துவக்க வகுப்புகளிலிருந்து தமிழ் வழிக் கற்றல் என்பது நடைமுறையில் பெற்றோர் மனதில் நம்பிக்கை ஊட் டாது. மருத்துவம், பொறியி யல் உள்ளிட்ட உயர் கல்வி யில் தமிழ்வழியும் தமிழ் வழிக் கற்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதை உத்தரவாதமாக உறுதியாக சட்டப்பூர்வ மான நடைமுறைக்குக் கொண்டு வந்தால் தான் ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு குறையும். இதற்கான உறுதியான நடவடிக் கைகள் எடுக்க தமிழக அரசை இம்மாநாடு வலி யுறுத்துகிறது. தமிழ் வழிக் கல்விக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு தீவிரத்துடன் முன் னெடுத்து நடத்த வேண்டு மெனவும் இம்மாநாடு கோருகிறது. தமிழைச் செம்மொழி யாக அங்கீகரித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டு ஒரு பெரிய உலகச் செம் மொழி மாநாடும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் மொழி வளர்ச் சிக்குத் தேவையான உருப் படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை உரிய விளக்க உரைகளுடன் மக்கள் பதிப்புகளாக வெளி யிட்டுப் பரவலாக்கிட தமி ழக அரசும் மத்திய செம் மொழி உயராய்வு நிறுவன மும் உடனடியாக முயல வேண்டும்.இந்தியாவிலேயே அதிகமாக கல்வெட்டுக்கள் உள்ள மாநிலம் தமிழகம். இன்னும் வாசித்து அச்சில் கொண்டுவரப்படாமல் அரசு கிடங்குகளில் கேட் பாரற்றுக் கிடக்கும் கல் வெட்டுக்களை அச்சில் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவ டிக்கை எடுத்திட வேண்டு மென்ற தீர்மானத்தை ச. தமிழ்ச்செல்வன் முன் மொழிய சு.ராமச்சந்திரன் வழிமொழிந்தார்.

Leave A Reply