சத்தி., பிப். 24- ஈரோடு மாவட்ட தமிழக நிலவுரிமை கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட கலந்தாய்வு கருத்தரங்கம் சத்தியமங்கலத்தில் நடந்தது . கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார். ஐ.மோகனதாசு வரவேற்றுப் பேசினார். விவசாயிகளும் நிலவுரிமைக்கான போராட்டங் களும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. திருத்தணிகாசலம், அதிவாசி மக்களின் நிலவுரிமை பிரச்னைகளும்- போராட்டங்களும் என்ற தலைப் பில் ராஜ்குமாரும், பறிபோகும் பஞ்சமி நிலங்கள்-நகர்புற குடிசை மக்களின் வாழ்வுரிமை என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் ஆகி யோர் பேசினர். தமிழக நிலவுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எல்.ஏ.சாமி நிறைவுரை ஆற் றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.